TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

0
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 - உடனே பாருங்க!
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 14 ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை திருத்திக் கொள்ளலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

குரூப் 2, 2ஏ தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுத் துறைகளுக்கான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தமாக குரூப் 2, 2ஏ தேர்விற்கு 5,831 காலிப் பணியிடங்களும், குரூப்-4 தேர்வுக்கு 5,255 காலிப் பணியிடங்களும் உள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2, 2ஏ தேர்வு வரும் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் தொடங்கி இம்மாதம் 23ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு? கல்வித்துறை ஆணையர் விளக்கம்!

இப்படி விண்ணப்பத்தை விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர்கள் சில தவறுகளை செய்ததாக தேர்வாணையத்தை தொடர்பு கொண்டுள்ளனர். தேர்வாணையம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மார்ச் 14ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை சரிசெய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள முறைகளை பயன்படுத்தி தங்களது விண்ணப்பங்களை சரி செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் நாளை (மார்ச் 15) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

திருத்தங்களை செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களது ஒருமுறை நிரந்தரப் பதிவில் (EDIT PROFILE) சென்று உரிய திருத்தங்களை செய்து அவற்றை சேமிக்கவும். அதன் பின்பு விண்ணப்பத்தில் உள்ள EDITஎன்கிற ஆப்ஷனுக்கு சென்று விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் செய்ய விரும்பினால் அதனை திருத்தம் செய்து சமர்ப்பிக்க வேண்டும். திருத்தம் செய்த பின்பு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்த பின் அதனை சரியாக சேமித்து வைத்து விட வேண்டும். மேலும், திருத்தம் செய்யப்பட்ட பின்பு ஏதேனும் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் உரிய தேர்வுக் கட்டணத்தை செலுத்தி விட வேண்டும். ஏற்கனவே செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்த தேவையில்லை. மேலும் இது தொடர்பான விளக்கங்களை அறிய விரும்பினால்  http://www.tnpscexams.in  என்கிற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம். மேலும்,18004190958 இந்த நம்பருக்கு காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!