TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு – இதை உடனே செய்யுங்க!

0
TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு - இதை உடனே செய்யுங்க!
TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு - இதை உடனே செய்யுங்க!
TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கவனத்திற்கு – இதை உடனே செய்யுங்க!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆனது நெருங்கி கொண்டிருக்கிறது. அதனால் பட்டதாரிகள் இருக்கின்ற இரு நாட்களில் விரைவாக விண்ணப்பிக்குமாறு அரசின் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு:

தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் கடந்த இரு ஆண்டுகளாக தலைதூக்கி இருந்தது. இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான தேதியும் தெரிவித்து உள்ளது அரசு. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று இருந்த காரணத்தால் கடந்த இரு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வராமல் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் tnpsc குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது. இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.

TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 – கொள்கை முடிவு எடுக்க கோரிக்கை முன்வைப்பு!

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதியை கடந்த 7ஆம் தேதி வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம். இந்த அறிவிப்பை பிளஸ் 12 மற்றும் பி. எட் படித்து முடித்த மாணவ மாணவிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுப்பிரிவினர், எம்பிசி , பி சி பிரிவினருக்கு ரூ 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 250 என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த தேர்வுகள் தாள் 1 ஜூன் 27 ஆம் தேதி அன்றும், தாள் 2 ஜூன் 28 ஆம் தேதி அன்றும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முறையாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக ஏப்ரல் 13 ஆம் தேதியை அறிவித்து உள்ளனர். எனவே இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.  மேலும் இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் ஏற்பட்டால்  94446-30028, 94446-30068 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம். இது தவிர மின்னஞ்சல் முகவரியும் தரப்பட்டுள்ளது. [email protected] என்ற ஐடிக்கும் தங்களது சந்தேகங்களை தெரிவிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் எம்.பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!