தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 13 வரை நீட்டிப்பு!
தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஆகஸ்ட் 3ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அது மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 13ம் தேதி வரை விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RTE மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் அரசு கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 % இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவசமாக கல்வி கற்க வாய்ப்பை வழங்குகிறது. தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மொத்தம் 1.12 லட்சம் இடங்கள் உள்ளனர். இந்த இடங்களுக்கு 2021-2022 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி தொடங்கியது.
இந்தியா டூ ஐக்கிய அரபு அமீரகத்திற்கான பயண தடை நீக்கம் – அரசு உத்தரவு!
இணையம் மற்றும் மாவட்ட கல்வி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கிறது. பிற்படுத்தப்பட்ட பிரிவினர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் போன்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பயில்வதற்கு மாணவர் சேர்க்கை நேற்றுடன் முடிவடைந்தது.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதப்பட்டது. இதனை ஏற்று தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருப்பதை கருத்தில் கொண்டு இணைய வழியில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே ஆகஸ்ட் 13ம் தேதி வரை RTE மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.