தனது அப்பா குறித்து பாரதியிடம் கேட்கும் லட்சுமி, அதிர்ச்சியில் கண்ணம்மா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
தனது அப்பா குறித்து பாரதியிடம் கேட்கும் லட்சுமி, அதிர்ச்சியில் கண்ணம்மா - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
தனது அப்பா குறித்து பாரதியிடம் கேட்கும் லட்சுமி, அதிர்ச்சியில் கண்ணம்மா - சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
தனது அப்பா குறித்து பாரதியிடம் கேட்கும் லட்சுமி, அதிர்ச்சியில் கண்ணம்மா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போதைய எபிசோடில் புதிய திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

பாரதி – கண்ணம்மா:

விஜய் டிவியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. லட்சுமியும், ஹேமாவும் பாரதியின் குழந்தைகள் என்பது எப்போது தெரிய வரும் என்று பெரும் எதிர்பார்ப்போடு சீரியல் எபிசோட் நகர்ந்து வருகிறது. பாரதியும் கண்ணம்மாவும் கோர்ட்டின் உத்தரவு படி 6 மாத காலம் சேர்ந்து வாழ முடிவு செய்து இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த நேரத்தில் வில்லி வெண்பா சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்தார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை – மீண்டும் திறப்பு எப்போது? அரசின் முடிவு!

அதே சதி திட்டத்தோடு பாரதியையும், கண்ணம்மாவையும் பிரிக்க முயற்சி செய்து வருகிறார். யார் மீது குற்றம் என்பதை தெரிந்து கொள்ள ஒரு கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்கின்றனர். இதில் யார் பொங்கல் முதலில் பொங்குகிறதோ அவர்கள் மீது தான் உண்மை உள்ளது தெய்வ வாக்கு என்று பாரதியின் தோழர் சொல்வதை கேட்டு பாரதியும் அங்கு செல்ல திட்டமிட்டார். இருவரும் போய் பொங்கல் வைத்தனர் இதில் கண்ணம்மாவில் பொங்கல் முதலில் பொங்கி அவள் பக்கம் இருக்கும் உண்மையை கடவுளே சொல்லியதாக குடும்பமே நம்பியது.

தமிழகத்தில் பொதுமக்களின் வங்கி கணக்கில் ரூ.1500 வரவு – பாஜக தலைவர் அண்ணாமலை!

ஆனால் பாரதியின் மனம் மட்டும் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனது அப்பா எப்போது வருவார் என்று லெட்சுமி கேட்டுக் கொண்டிருந்த நிலையில் கண்ணம்மா எனது பிறந்தநாள் அன்று உன் அப்பா வருவார் அவரை உனக்கு காண்பிக்கிறேன் என்று கூறுகிறார். இந்த நிலையில் உன் அப்பா டாக்டர் பாரதி மாறித்தான் இருப்பார். அவருக்கு உன் அப்பாவை பத்தி தெரியும் என்று வடிவு கூறுகிறார். இந்த தருணத்தில் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது அதில் லட்சுமி பாரதிக்கு போன் பண்ணி என் அப்பா பத்தி உங்களுக்கு தெரியுமா என்று கேள்வி கேட்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here