தமிழக தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடு? கல்வித்துறை முக்கிய உத்தரவு!

0
தமிழக தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடு? கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழக தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடு? கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழக தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடு? கல்வித்துறை முக்கிய உத்தரவு!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க, அனைத்து தனியார் பள்ளிகளிலும், மீண்டும் உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு:

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியை சூறையாடி 40க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர். மேலும் இந்த கலவரத்தில் போலீசாரும் காயமடைந்தனர். இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டதாக சுமார் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி பள்ளி கட்டிடத்தை, கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். இதன் மூலம் பள்ளி பாதுகாப்பு விதிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

Exams Daily Mobile App Download

இதில், பள்ளியின் மொட்டை மாடிக்கு செல்லும் வழி அடைக்கப்படாமல் திறந்து இருந்தது தெரிய வந்துள்ளது. அதேபோல் பள்ளி வளாகத்தில் உரிய இடங்களில் கண்காணிப்பு கேமரா இல்லாதது மற்றும் உறைவிட பள்ளிகளுக்கான விதிகளை சரியாக பின்பற்றாதது என பல குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதாவது, தனியார் பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தின் படி, பள்ளி வகுப்பறை கட்டடத்திலேயே, தங்கும் அறைகள் இருக்க கூடாது. ஆனால், கள்ளக்குறிச்சி பள்ளியில் வகுப்பறை கட்டடத்திலேயே, விடுதி இருந்ததும் தெரிய வந்தது. இதை அதிகாரிகள் முன்கூட்டியே ஆய்வு செய்ய தவறியது ஏன் என்ற கேள்வி எழுந்து உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வு வினாக்கள் குறித்து எழும் குற்றசாட்டு – விளம்பரம் தேடுவதாக புகார்!

மேலும், கண்காணிப்பு கேமராக்கள் குறித்து, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பள்ளி வளாகத்தில் முக்கிய இடங்களில் கேமரா பொருத்தப்படாமல் இருந்ததும், அதை பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் விட்டு விட்டதாகவும், குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தனியார் பள்ளி கட்டிடங்கள் மற்றும் விடுதிகளை ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்பேரில் சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, நீலகிரி, மதுரை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் செயல்படும் ‘ரெசிடென்சியல் ஸ்கூல்’ எனப்படும் உறைவிட பள்ளிகளில், மாணவர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்து, அறிக்கை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here