புது வீட்டில் குடியேறிய KPY அறந்தாங்கி நிஷா – வெளியான வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

0
புது வீட்டில் குடியேறிய KPY அறந்தாங்கி நிஷா - வெளியான வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
புது வீட்டில் குடியேறிய KPY அறந்தாங்கி நிஷா - வெளியான வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!
புது வீட்டில் குடியேறிய KPY அறந்தாங்கி நிஷா – வெளியான வீடியோ! ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் KPY அறந்தாங்கி நிஷா தற்போது புதிய வீட்டில் குடியேறியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அறந்தாங்கி நிஷா

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’ சீசனில் பெண் போட்டியாளராக கலந்து கொண்டவர் அறந்தாங்கியை சேர்ந்த நிஷா. பட்டிமன்ற பேச்சாளரான அறந்தாங்கி நிஷா இந்த நிகழ்ச்சியில் தனது தனித்துவமிக்க பேச்சால் மக்களின் மனம் கவர்ந்து சிறந்த நகைச்சுவையாளராக உயர்த்தப்பட்டார். இவர் மீதும் விஜய் டிவியின் ஸ்டார் என்கிற வெளிச்சம் படவே அடுத்தடுத்து பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களின் பேவரைட் ஆக மாறினார்.

திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆனதை கொண்டாடிய ரேஷ்மா, மதன் ஜோடி – இன்ஸ்டா வைரல்!

தொடர்ந்து ‘பிக்பாஸ்’ சீசன் 4ல் கலந்து கொண்ட இவர் இந்நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். பிறகு ‘குக் வித் கோமாளி’ மற்றும் ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து ‘பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற நடன நிகழ்ச்சியில் டான்சராக மாறிய அறந்தாங்கி நிஷா, தற்போது சீரியலில் களமிறங்கி இருக்கிறார். அந்த வகையில், இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வாய்தா வடிவுக்கரசி என்கிற காமெடி கதாப்பாத்திரம் ஒன்றில் கலக்கி வருகிறார் அறந்தாங்கி நிஷா.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டில் கயல் பாப்பா பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம் – ரசிகர்கள் உற்சாகம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சொந்த ஊராக கொண்ட நிஷா, இதுவரை விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்காக தந்து சொந்த ஊரில் இருந்து சென்னை வந்து சென்றுகொண்டிருந்தார். இப்போது, சென்னையில் புதிதாக வீடு வாங்கி இருக்கும் அறந்தாங்கி நிஷா தனது குடும்பத்தாருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறாராம். இப்போது புதிய வீட்டில் பால் காய்ச்சி, விருந்து சமைத்து சாப்பிடுவது போல நிஷா வெளியிட்ட வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!