வீடுகளில் நாய் வளர்க்க புதிய கட்டுப்பாடுகள் – கேரளாவில் அதிரடி நடவடிக்கை!

0
வீடுகளில் நாய் வளர்க்க புதிய கட்டுப்பாடுகள் - கேரளாவில் அதிரடி நடவடிக்கை!
வீடுகளில் நாய் வளர்க்க புதிய கட்டுப்பாடுகள் - கேரளாவில் அதிரடி நடவடிக்கை!
வீடுகளில் நாய் வளர்க்க புதிய கட்டுப்பாடுகள் – கேரளாவில் அதிரடி நடவடிக்கை!

கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கும் நிலையில், அதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வீடுகளில் நாய் வளர்க்க கட்டுப்பாடுகள் குறித்து புதிய திட்டத்தை மாநகராட்சி அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நாய் வளர்க்க கட்டுப்பாடு:

கடந்த சில மாதங்களாக கேரளாவில் தெருநாய் கடியால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவோர் அதிகரித்த வண்ணம் உள்ளனர். ஒரே மாதத்தில் 100க்கு மேற்பட்டவர்கள் தெரு நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்நிலையில் திருவனந்தபுரம் மாநகராட்சி சார்பில் வீடுகளில் நாய் வளர்க்க புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி, வீடுகளில் அதிகபட்சம் 2 நாய்கள் மட்டுமே வளர்க்க வேண்டும் என கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக திருவனந்தபுரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இனி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகளில் ‘இது’ கட்டாயம் – மகாராஷ்டிரா அரசின் அதிரடி உத்தரவு!

மேலும் 2க்கு மேற்பட்ட நாய்கள் வளர்த்தால் அது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, ஒரு வீட்டில் இரண்டு நாய்களுக்கு மேல் வளர்க்கக்கூடாது என, ஹெல்த் ஸ்டாண்டிங் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் இரண்டு நாய்களுக்கு மேல் நாய் வளர்க்க வேண்டும் என்றால் அதற்காக சிறப்பு அனுமதி கோரி மாநகராட்சிக்கு மனு அளிக்க வேண்டும். மேலும் ரூ.1000, ரூ. 750, ரூ. 500 என மாநகரட்சிக்கு ஆண்டு கட்டணம் செலுத்தி நாய்களை வளர்க்கலாம் என்ற திட்டம் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!