அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை – காரணம் இது தான்!

0
அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை - காரணம் இது தான்!

கேரளா அரசானது இயந்திர கோளாறு காரணமாக அரசு ஊழியர்களுக்கான இம்மாத சம்பளத்தை தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளது.

அரசு ஊதியத்திற்கு தடை:

கேரளா அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் கேரளாவின் சேவை மற்றும் ஊதிய நிர்வாகக் களஞ்சியம் (SPARK) என்னும் மென்பொருள் வாயிலாக கணக்கிடப்பட்டு இதுவரை வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய மென்பொருளில் ஒரு சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் SPARK அப்ளிகேஷனை அணுக முயற்சிக்கும் போது தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கணினி செயல்படாது என்னும் அறிவிப்பு திரையிடப்படுகிறது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Research Associate வேலை – சம்பளம்: ரூ.28,000/- || நேர்காணல் மட்டுமே!

இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படுவதில் தடை ஏற்பட்டுள்ளது. மேலும் இம்மாத ஊதியம் மென்பொருள் சரி செய்யப்பட்ட பின் தாமதமாக வழங்கப்படும் எனவும் அரசு தரப்பு சார்பாக கூறப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!