டெல்லிக்கு பறந்த காற்றுக்கென்ன வேலி சீரியல் குழுவினர் – காரணம் என்ன தெரியுமா?

0
டெல்லிக்கு பறந்த காற்றுக்கென்ன வேலி சீரியல் குழுவினர் - காரணம் என்ன தெரியுமா?
டெல்லிக்கு பறந்த காற்றுக்கென்ன வேலி சீரியல் குழுவினர் - காரணம் என்ன தெரியுமா?
டெல்லிக்கு பறந்த காற்றுக்கென்ன வேலி சீரியல் குழுவினர் – காரணம் என்ன தெரியுமா?

தற்போது வெண்ணிலா பேச்சு போட்டியின் இறுதி சுற்றுக்காக டெல்லி செல்ல இருக்கிறார். அதனை ரியலாக சீரியலில் காண்பிக்க வேண்டும் என்பதற்காக சீரியல் குழுவினர் டெல்லியில் வைத்து சீரியலை படமாக்கி கொண்டிருக்கின்றனர். டெல்லியில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

காற்றுக்கென்ன வேலி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்களின் மனதில் நல்ல ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. அந்த வகையில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் காற்றுக்கென்ன வேலி தொடர் தற்போது தான் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தத் தொடரில் சூர்யா கதாபாத்திரத்தில் சுவாமிநாதனும், வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்காவும் நடித்து வருகிறார்கள்.

TCS, HCL உள்ளிட்ட IT நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – WFH குறித்த முக்கிய அறிவிப்பு!

அதாவது தான் கற்க வேண்டிய கல்விக்கு பல தடைகள் வந்தாலும் அனைத்து தடைகளையும் உடைத்து எறிந்துவிட்டு படித்தே தீர வேண்டும் என்கிற ஆசையில் கல்லூரியில் சேர்ந்து பல போராட்டங்களில் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கும் ஒரு சாதாரண பெண்ணின் கதையாகத்தான் காற்றுக்கென்ன வேலி தொடர் அமைந்து வருகிறது. தற்போது வெண்ணிலா சாரதா வீட்டில் தங்கி தான் கல்லூரிக்கு சென்று வருகிறார். சாரதாவிற்கு துணையாக சூர்யா வீட்டில் தான் இருக்கிறார். எனவே சூர்யா மற்றும் மூவரும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு தான் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் இருப்பது மீனாட்சிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இந்த வாரம் டெல்லியில் வெண்ணிலாவுக்கு ஒரு பேச்சு போட்டி இருக்கிறது. அந்த பேச்சுப்போட்டியில் வெண்ணிலா கலந்து கொள்ளக் கூடாது எனவும் அப்படி கலந்து கொண்டால் அவர் வெற்றி பெறவே கூடாது எனவும் பல சதி வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. அதையும் மீறி வெண்ணிலா அந்த பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். அந்தப் பேச்சு போட்டி டெல்லியில் நடக்க இருப்பதால் சீரியல் குழுவினர்கள் அப்படியே ரியல் ஆகவே சீரியலை கொண்டு போக விரும்புவதால் டெல்லிக்கு சென்று படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். தற்போது டெல்லியில் காற்றுக்கென்ன வேலி சீரியல் குழுவினர்கள் இருக்கும்படியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. வெண்ணிலா அனைத்து தடைகளையும் தாண்டி இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!