மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜூலையில் மீண்டும் அகவிலைப்படி (DA) அதிகரிப்பு? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - ஜூலையில் மீண்டும் அகவிலைப்படி (DA) அதிகரிப்பு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - ஜூலையில் மீண்டும் அகவிலைப்படி (DA) அதிகரிப்பு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜூலையில் மீண்டும் அகவிலைப்படி (DA) அதிகரிப்பு? முழு விவரம் இதோ!

வரும் ஜூலை மாதம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொகையை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமாக உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாக வரும் மாதத்தில் அரசிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்து வரும் ஜூலை மாதத்திற்குள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்பை பெறலாம். இது குறித்த பல ஊடக அறிக்கைகளின்படி, அடுத்த மாதம் அதாவது ஜூலை 1 ஆம் தேதியன்று அரசு ஊழியர்களுக்கான மற்றொரு DA உயர்வை மத்திய அரசு அமல்படுத்த வாய்ப்புள்ளது. பொதுவாக அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் DA தொகை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசாங்கத்தால் திருத்தப்படுகிறது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது குறைப்பு? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?

அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவித்தது. அதன் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த DA தொகை 34% ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் AICPI குறியீடு 126க்கு மேல் இருந்தால் DA தொகை 4 சதவீதம் வரை உயரக்கூடும். முன்னதாக ஜனவரி மற்றும் பிப்ரவரியில் ஏஐசிபிஐ முறையே 125.1 மற்றும் 125 ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் அது 126 ஆக உயர்ந்தது. இப்போது, ஏஐசிபிஐ அளவு இன்னும் உயர்ந்தால், 4 சதவீத டிஏ உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

தற்போது, அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 34 சதவீதம் டிஏ வழங்கப்படுகிறது. இப்போது 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டால், அவர்களுக்கு அடிப்படை ஊதியத்தின் படி 38 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். இந்த உயர்வு மூலம் ரூ.18,000 அடிப்படை ஊதியம் உள்ள ஒரு ஊழியர் தற்போது 31 சதவீத டிஏ விகிதத்தில் ரூ.6,120 டிஏ பெறுகிறார். ஜூலையில் சமீபத்திய டிஏ உயர்வு 4 சதவீதமாக அமல்படுத்தப்பட்டால் மொத்த தொகை ரூ.6,840 ஆக உயரும். மேலும், நகர்ப்புறத் துறை, அரை நகர்ப்புறத் துறை அல்லது கிராமப்புறத் துறையில் பணிபுரியும் பணியாளருக்கு அகவிலைப்படி தொகை மாறுபடும் என்பது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here