ஜான்சன் பேபி பவுடர் விற்பனை நிறுத்தம் – அதிர்ச்சி தகவல் வெளியீடு!
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கடந்த 1894ம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கான டால்கம் பவுடரை விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஜான்சன் & ஜான்சன்
உலகம் முழுவதும் குழந்தைகளுக்கான டால்கம் பவுடரை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் 1894ம் ஆண்டு முதல் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, டால்கம் பவுடரில் பயன்படுத்தப்படும் ஆஸ்பெடாஸ் காரணமாக குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் என்று வாடிக்கையாளர்கள் இது தொடர்பாக வழக்கு தொடுத்துள்ளனர். அத்துடன் அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த நிறுவனத்திற்கு எதிராக சுமார் 38,000 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதனால் அமெரிக்கா மற்றும் கனடாவில் டால்கம் பவுடர் விற்பனை கடும் சரிவை கண்டது. அதன் காரணமாக இந்நிறுவனம் தனது பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்தியது. இதனை தொடர்ந்து, இந்நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு பிறகு உலகம் முழுவதும் டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் ஜான்சன் & ஜான்சன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எங்கள் டால்கம் பவுடரின் பாதுகாப்பு குறித்து எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. அத்துடன் டால்கம் அடிப்படையிலான ஜான்சன் பேபி பவுடர் மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும்.
தமிழக பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம் – அரசு அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெடாஸ் கலக்கப்படவில்லை என்றும் இதனால் புற்றுநோய் ஏற்படாது என்றும் மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது. அத்துடன் வட அமெரிக்காவில் தங்களின் நிறுவன தயாரிப்பு குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டதால் தங்கள் நிறுவனத்திற்கு எதிராக இதுவரை 38,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அடுத்தாண்டு முதல் ஜான்சன் பேபி பவுடர் உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்காது என்பது உறுதியாகிறது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்