TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு – கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு!

1
TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு - கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு!
TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு - கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு!
TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு – கல்வித்தகுதி, விண்ணப்ப பதிவு!

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ‘ஸ்மார்ட் ஹையரிங் திட்டத்தின்’ கீழ் புதியவர்களுக்கு வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. இதற்கான தகுதிகள் மற்றும் விவரங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.

புதியவர்களுக்கான வேலைவாய்ப்பு:

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் முன்அனுபவம் அற்ற புதிய பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பை அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 43,000 புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக டிசிஎஸ் அறிவித்தது. இதுவரையில் உள்ள எண்ணிக்கையில் இது அதிகபட்ச எண்ணிக்கையாகும். நடப்பு ஆண்டு முடிவதற்குள் மேலும், குறைந்தது 35,000 பேரை நியமனம் செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஜீரோ கவுன்சிலிங்! அமைச்சர் அறிவிப்பு!

இதற்காக ‘ஸ்மார்ட் ஹையரிங் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் பதிவு செய்வதற்காக நவம்பர் 2ம் தேதி இறுதி நாளாகும். இந்த திட்டத்திற்கான தேர்வு நவம்பர் 19ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ் ஸ்மார்ட் பணியமர்த்தல் திட்டத்தில் 2020, 2021 & 2022 தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்களுக்கு BCA, B. Sc (கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், மின்னணுவியல், உயிர் வேதியியல், கணினி அறிவியல், IT) பி. சிஎஸ் / ஐடி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிசிஎஸ் ஸ்மார்ட் பணியமர்த்தல் தேர்வு செயல்பாட்டின் போது சிறப்பாக செயல்படும் மாணவர்கள் டிசிஎஸ் இக்னைட் ‘சயின்ஸ் டு மென்பொருள்’ திட்டத்தில் சேர வாய்ப்பு கிடைக்கும்.

தேர்வின் தகுதிகள்:

10 மற்றும் 12ம் வகுப்பு மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள மாணவர்கள் பட்டப்படிப்புகளில் கல்வியாளர்கள் முழுவதும் 5 அல்லது 50% CGPA இருக்க வேண்டும். 2021 மற்றும் 2020 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைத்து பாடங்களையும் நிலுவை இல்லாமல் முடித்திருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் இடைவெளிகள் இருப்பதை அறிவிப்பது கட்டாயமாகும்.

தீபாவளிக்கு இரவு 8 மணிமுதல் 10 மணிவரை பட்டாசு வெடிக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!

ஒட்டுமொத்த கல்வி இடைவெளி 2 வருடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்வு செயல்முறையின் பல்வேறு கட்டங்களில் டிசிஎஸ் தகுதி சோதனைகள் நடத்தப்படும். எந்தவொரு கட்டத்திலும் ஒரு மாணவர் தகுதியற்றவராகக் கண்டறியப்பட்டால், அவரை நிராகரிக்க அனைத்து உரிமைகளையும் டிசிஎஸ் கொண்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!