Jio, Airtel, VI நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டம் – ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்!

0
Jio, Airtel, VI நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டம் - ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்!
Jio, Airtel, VI நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டம் - ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்!
Jio, Airtel, VI நிறுவனங்களின் ரீசார்ஜ் திட்டம் – ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ்!

இந்தியாவின் டாப் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Jio, Airtel, VI ஆகியவை ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் என பல்வேறு சலுகைகளுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகின்றன. இந்த 3 நிறுவனங்களின் எது சிறந்தது என்பதை இப்பதிவில் காணலாம்.

ரீசார்ஜ் திட்டங்கள்:

அன்லிமிடெட் கால்ஸ், ஒரு நாளைக்கு 2 GB டேட்டா ஆகியவற்றைக் கொண்ட திட்டத்தை தேடும் ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் உள்ளனர். ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற ஒரு திட்டத்தை வழங்குகிறது. இதன் விலை 449 ரூபாய். இத்திட்டத்தில், வாடிக்கையாளர்கள் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைப் பெறுகின்றனர். இது 56 நாட்கள் செல்லுபடியாகும்.

தமிழக அரசின் ரூ.4000, மளிகை பொருட்களை வாங்காதவர்கள் கவனத்திற்கு – இறுதி வாய்ப்பு!

ரிலையன்ஸ் ஜியோ ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் ரூ.444 திட்டத்தை வழங்குகிறது. இதுவும் வாடிக்கையாளர்களுக்கு 56 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது மொத்த டேட்டா 112 ஜிபி ஆகும். இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இதனுடன், JioTV, JioNews, JioCinema போன்ற செயலிகளின் இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இதே போன்ற அம்சங்களைக் கொண்ட மற்றொரு திட்டத்தையும் ஜியோ கொண்டு வருகிறது, இதன் விலை ரூ.249. ஜியோவின் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவை 28 நாட்கள் பெறுவர். இது தவிர, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ நியூஸ், ஜியோ சினிமா போன்ற செயலிகள் இலவச சந்தா ஆகியவை வழங்கப்படுகின்றன.

எழிலிடம் வசமாக சிக்கிய கோபி & ராதிகா, பாக்கியாவிற்கு ஸ்கூட்டி சர்பிரைஸ் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

ஏர்டெல் போலவே, வோடபோன்-ஐடியாவும் (Vi) ரூ.449 விலையில் ஒரு திட்டத்தை வழங்குகிறது. 56 நாட்கள் செல்லுபடியாகும் இத்திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர, வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 எஸ்எம்எஸ், வார இறுதி டேட்டா மாற்றம் மற்றும் வி மூவிஸ் & டிவி கிளாசிக் சந்தா கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!