Jio, Airtel & Vi வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்!
வோடபோன் ஐடியாவின் ரூ.449 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இப்போது டபுள் டேட்டா மற்றும் ஜீ 5 பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. இது குறித்த முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
வோடபோன் ஐடியா (Vi):
வோடபோன் ஐடியா (Vi) அதன் ரூ.449 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளது. இது இப்போது மற்ற நன்மைகளைத் தவிர டபுள் டேட்டா மற்றும் ஜீ 5 பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டம் இப்போது ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டா மற்றும் இரவு இலவச டேட்டாவுடன் (12:00 AM முதல் 6:00 AM) வருகிறது. அதுமட்டுமல்லாமல் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. வார இறுதியில் டேட்டா ரோல்ஓவர் வசதி மற்றும் வி மூவிஸ் & டிவி ஆப் சந்தாவும் உள்ளது. இந்த திட்டம் 56 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
தமிழக அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – இன்றே கடைசி நாள்!
ரிலையன்ஸ் ஜியோ ரூ .444 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை கொண்டுள்ளது, இதில் எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டாவும் அடங்கும், அதாவது நீங்கள் மொத்தம் 112 ஜிபி டேட்டாவை பெறுகிறீர்கள். இந்த திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும். இதனை போன்ற ரூ.249 திட்டமும் உள்ளது, ஆனால் அது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த ஜியோ திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதாவது மொத்தம் 56 ஜிபி டேட்டா. இது எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.
TN Job “FB Group” Join Now
ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை கொண்டுள்ளது. ஏர்டெல்லின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இது தவிர, இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கு இலவச சந்தாவை வழங்குகிறது. இத்திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.