ஜனவரி 1-15 நடப்பு நிகழ்வுகள் 2018

0

 உலகம்

1. அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் அருணா மில்லர் போட்டி

 • அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் அருணா மில்லர் (வயது 53) போட்டியிடுகிறார்.
 • அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில், மேரிலாண்ட் பகுதி எம்.பியாக இருந்து வரும் ஜனநாயகக் கட்சியின் ஜான் டிலேனே பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு ஜூ்ன் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜான் அறிவித்துள்ளார். இதையடுத்து, அந்த இடத்திற்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லர் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மேரிலாண்ட் மாகாண கீழ்சபை உறுப்பினராக தற்போது உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு முதல் அந்த பதவியில் உள்ளார்.

2. அமெரிக்கா – மெக்சிகோ எல்லைச் சுவரை விரிவுபடுத்த 18 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும் ட்ரம்ப்

 • அமெரிக்கா மெக்சிகோ இடையே எல்லைச் சுவரை விரிவுபடுத்த சுமார் 18 பில்லியன் டாலர்களை 10 ஆண்டுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலீடு செய்ய இருக்கிறார்.
 • அமெரிக்கா மெக்சிகோவிக்கு இடையேயான எல்லை ஓரத்தில் சுமார் 1,552 கிலோமீட்டர்களுக்கு இந்த சுவர் எழுப்படவுள்ளது. இதற்கான பணி 2027 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

3. பிரதமர் நரேந்திர மோடிக்கு கடல் நீர் சுத்திகரிப்பு வாகனம்: இஸ்ரேல் பிரதமர் பரிசளிக்க திட்டம்

 • தமது இந்திய சுற்றுப்பயணத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடல் நீரை குடிநீராக்கும் வாகனத்தை பரிசாக வழங்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டமிட்டுள்ளார்.
 • இஸ்ரேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள ஓல்கா கடற்கரையில் அமைந்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அந்நாட்டு பிரதமர் நெதன்யாகுவுடன் இணைந்து நரேந்திர மோடி பார்வையிட்டார். கடல் நீரை குடிநீராக்கும் ஜீப்பில் பயணம் செய்தபடியே, அவர்கள் அந்த சுத்திகரிப்பு நிலையத்தை பார்வை யிட்டனர்.

4. முதல் “ப்ளூ மூன்”: ஜனவரி 31-ம் தேதி 150 ஆண்டுகளின் அரிதான முழு சந்திர கிரகணம்

 • மாதத்தின் 2-வது பவுர்ணமி தினத்தன்று 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழுமுற்று சந்திர கிரகணம் இம்மாதம் 31-ம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ‘நீல நிலா’ (ப்ளூ மூன்) என்று அழைக்கப்படுகிறது.
 • 2018-ன் முதல் சந்திரகிரகணம் இது. இந்தியத் துணைக்கண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவை இந்த கிரகணம் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளது.
 • ஜனவரி 31- ம் தேதி நள்ளிரவில் இந்த முழு சந்திரகிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்கடல் அப்பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.
 • இந்தியா – இஸ்ரேல் ஏவுகணை ஒப்பந்தம் ரத்துஇஸ்ரேலிடமிருந்து ஏவுகணைகளை வாங்குவதற்காக சுமார் ரூ.3,100 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேல் வருத்தம் தெரிவித்துள்ளது.

5. பீரங்கிகளை தகர்க்கவல்ல “ஸ்பைக்ஸ்” ரக ஏவுகணைகளை இஸ்ரேலிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்தது. இதற்காக, இஸ்ரேல் அரசின் ஆயுதத் தளவாட நிறுவனமான ரபேலுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சுமார் ரூ.3,100 கோடிக்கு அண்மையில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துவிட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

6. பெரூவில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம்

 • பெரூ நாட்டில் கடலுக்கு அடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்பு வாபஸ் பெறப்பட்டது.
 • ரிக்டர் அளவுகோலில் 7.3 என்று இந்த் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பெரூ கடற்கரை ஊர்கள் சிலவற்றுக்கும், சிலிக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் பிற்பாடு பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரிக்கையை வாபஸ் பெற்றது.
 • இந்த நிலநடுக்கத்தின் மையம் அகாரியிலிருந்து தென் தென்மேற்காக 42 கிமீ தொலைவில் இருந்தது. 12.1கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

7. காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்த ரூ.288 கோடி நிதியுதவி: இலங்கைக்கு இந்தியா வழங்கியது

 • காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா ரூ.288 கோடி நிதியுதவியை இலங்கைக்கு வழங்கி யுள்ளது.
 • இதுதொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கையின் நிதி மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி வளர்ச்சி வங்கி கடந்த 10-ம் தேதி கையெழுத்திட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

8. முதன்முறையாக சவுதியில் பெண்களுக்கான கார் விற்பனையகம் தொடக்கம்

 • சவுதி அரேபியாவில் முதன்முறையாக பெண்களுக்கான கார் விற்பனையகம் தொடங்கப்பட்டுள்ளது.
 • சவுதி அரேபியாவில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் ஓட்டுவதற்கு பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இஸ்லாமிய மதக் கோட்பாட்டின் அடிப்படையில், இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதனிடையே, சவுதியின் புதிய மன்னராக பொறுப்பேற்ற முகமது சல்மான், பெண்கள், வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கடந்த செப்டம்பர் மாதம் நீக்கினார். மன்னரின் இந்த நடவடிக்கைக்கு பெரும்பாலான உலக நாடுகள் பாராட்டு தெரிவித்தன.

9. மியான்மரில் மிதமான நிலநடுக்கம்: 5.3-ஆக பதிவு

 • மியான்மரில் இன்று மிதமான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிகடர் அளவுகோலில் 5.3-ஆக பதிவாகியது.
 • இதுகுறித்து மியான்மர் தரப்பில், மியான்மரின் போகோ மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மிதமான நிநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிகடர் அளவுகோலில் 5.3ஆக பதிவாகியது. இந்த நில நடுக்கம் பூமிக்கடியில் 27 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்க அதிர்வு யாங்கான், தவான்கோ, பையூ, ஆகிய இடங்களில் உணரப்பட்டது” என்று கூறப்பட்டது.

10.ஹோண்டூராஸில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

 • மத்திய அமெரிக்க நாடுகளான  ஹோண்டூராஸ், கேமன் தீவுகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6-ஆக பதிவாகியது.
 • இதனைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 • இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தரப்பில், ” மத்திய அமெரிக்க நாடுகளான  ஹோண்டுரஸ், கேமன் தீவுகள் ஆகியவற்றில் செவ்வாய்க்கிழமை இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

11.இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் இங்கிலாந்து அமைச்சரானார்

 • இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் இங்கிலாந்தில் அமைச்சராகியுள்ளார். இதுபோலேவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு எம்.பியான சுயிலா  பெர்னாண்டஸூம் அமைச்சர் பதவி ஏற்றுள்ளார்.
 • இங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த தெரஸா மே பிரதமராக உள்ளார். இவர் தனது அமைச்சரவையை நேற்று மாற்றி அமைத்தார். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தியின் மருமகனும், யங்காஷர் எம்.பியுமான ரிஷி சுனக் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

12.குளிர்கால ஒலிம்பிக் போட்டி: வடகொரியா பங்கேற்பு

 • தென்கொரியாவில் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் எங்கள் நாட்டு வீரர்கள் கலந்து கொள்வார்கள் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.
 • மேலும் குளிர்கால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் வடகொரியா வீரர்களுடன் அவர்கள் நாட்டைச் சேர்ந்த குழுவும் அனுப்பப்படும் என்றும்  வடகொரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

13.எச்1பி விசா நீட்டிப்புக் கொள்கையில் மாற்றமில்லை: இந்திய ஐடி ஊழியர்கள் நிம்மதி

 • எச்1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வலியுறுத்தும் விதிமுறை மாற்றங்கள் செய்யப்படமாட்டாது என்று அமெரிக்க குடியேற்றத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

14. ஈரானில் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கத் தடை

 • ஈரானில் ஆராம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 • ஆரம்பக் கல்வியில் பிற மொழிகளை உட்புகுத்துவது கலாச்சார ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் என்று இஸ்லாமிய மத தலைவர்கள் எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா

15.அசாமில் குடிமக்களின் தேசிய பதிவேடு வெளியீடு: முதல் வரைவுப் பட்டியலில் 1.9 கோடி பேர்

 • அசாம் மாநிலத்தின் முதல் வரைவு, குடிமக்களின் தேசிய பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவுப் பட்டியலில் 1.9 கோடி பேர் குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
 • அசாம் மாநிலத்தில், பங்களாதேஷில் இருந்து ஏராளமானோர் ஊடுருவியுள்ளதாக புகார் இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக அங்கு வசித்து வரும் பங்களாதேஷ் நாட்டவர்கள், குடும்ப அட்டை உட்பட ஆவணங்களையும் வைத்துள்ளதால், அவர்களை கண்டறியும் நடவடிக்கைகள், 1951-ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டு வருகிறது.
 • இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த, உச்ச நீதிமன்றம் டிசம்பர் 31-ம் தேதிக்குள், குடிமக்களின் தேசிய பதிவேட்டின் முதல் வரைவுப் பட்டியலை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

முக்கியமான குறிப்புகள்:

 1. தலைநகர் – திஸ்பூர்
 2. முதல் அமைச்சர்- சர்பானந்த சோனுவால்
 3. கவர்னர் – ஜக்திஷ்

16.வெளியுறவு செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமனம்

 • மூத்த ஐஎப்எஸ் அதிகாரியான விஜய் கேசவ் கோகலே (58) அடுத்த வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியில் நீடிப்பார்.
 • இப்போது இந்தப் பதவியில் உள்ள எஸ்.ஜெய்சங்கர் வரும் 28-ம் தேதி ஓய்வு பெற உள்ளார். இதையடுத்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையின் நியமன குழு கோகலே நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. விஜய் கேசவ் கோகலே, இப்போது வெளியுறவு அமைச்சகத்தின் பொருளாதார உறவுகள் பிரிவு செயலாளராக உள்ளார்.

17.பெண்களுக்காக மத்திய அரசின் பிரத்யேக இணையதளம்: http://www.nari.nic.in/

 • பெண்களுக்கான அரசின் அனைத்து திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை ஒரே தளத்தில் பார்க்க, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • இந்த இணையதளத்தை செவ்வாய்க்கிழமை அன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி அறிமுகப்படுத்தி வைத்தார். இதில் பெண்கள் நலம்பெறும் வகையிலான முக்கியத் தகவல்கள் அடங்கிய சுமார் 350 திட்டங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
 • இதன் முகப்புப் பக்கத்தில் பெண்கள் வயது அடிப்படையில் 4 பிரிவினராகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவர்களின் வயது, மாநிலம், எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறது என்ற தேர்வுகளின் அடிப்படையில் உதவிகள் வழங்கப்படுகின்றன.

18.பூஜ்ஜிய நேரம் & கேள்வி நேரம்

 • நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் நடைமுறை பின்பற்றப்படுகிறது. கேள்வி நேரத்தில் கேள்விகளை எழுப்ப 10 நாட்களுக்கு முன்பாக அவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளிக்க வேண்டும். அதேநேரம் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் குறித்து முன்கூட்டியே நோட்டீஸ் அளிக்காமல் பூஜ்ஜிய நேரத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப முடியும். எனினும் அன்றைய தினம் காலை 9 மணிக்கு முன்பாக நோட்டீஸ் அளிக்க வேண்டும்.

19.தன்னந்தனியாக இனி எவரெஸ்ட் சிகரம் செல்லத் தடை; சட்டத் திருத்தத்தை நிறைவேற்றியது நேபாள அரசு:

 • தன்னந்தனியே எவரெஸ்ட் சிகரம் மற்றும் மலையேற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஓர் உயரதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார்.
 • நேபாள நாடாளுமன்றம் வியாழக்கிழமை கூடி, இமயமலை நாட்டின் மலையேற்ற ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதலை அளித்தது.

20.சபரிமலை ஐயப்பன் கோயில் பெயர் மீண்டும் மாற்றம்: திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு

 • சபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயரை மீண்டும் ‘ஸ்ரீ தர்ம சாஸ்தா கோயில்’ என மாற்றுவதற்கு திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
 • கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயில், ‘ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில்’ என அதிகாரபூர்வமாக அழைக்கப்பட்டு வந்தது. கேரளாவில் இதே பெயரில் உள்ள கோயில்களில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுகின்றனர். சபரிமலையில் 10 – 50 வயது வரை உடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

21.ஓபிசி மசோதா மக்களவையில் தாக்கல்

 • நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) உரிமைகள், சமூக நீதி உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் இதர பிற்படுத்தப்பட்டோர் நலச் சட்ட மசோதாவை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்தது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கென அரசியல் சாசன அந்தஸ்துடன் கூடிய ஓர் ஆணையத்தை அமைப்பது, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய இனங்கள் சேர்க்கப்படுவதைத் தடுப்பது உள்ளிட்டவை இந்த மசோதாவின் முக்கிய அம்சங்களாகும்.

22.அழகு, வெண்மை நிறத்தைப் பாதுகாக்க தினமும் 40,000 பேருக்கு மட்டும் தாஜ்மஹாலை பார்க்க அனுமதி

 • இந்திய பாரம்பரியச் சின்னமான தாஜ்மஹாலை பார்வையிட நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 • உலக அதிசயங்களுள் ஒன்றாக விளங்கும் தாஜ்மஹாலை, இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
 • அதிகபடியான சுற்றுலாப் பயணிகளின் வருகையின் காரணமாக, தாஜ்மஹாலின் அழகையும், அதன் வெண்மை நிறத்தையும் பராமரிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. தாஜ்மஹாலை பராமரிப்பதற்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்டிருக்கும் தொல்லியல் ஆராய்ச்சித் துறையினரும், இந்த தகவலை மத்திய அரசிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தனர்.

23.கடந்த 10 மாதங்களாக பழுதாகி நிற்கும் இந்திய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்

 • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான ‘ஐஎன்எஸ் அரிஹந்த்’ மனிதப் பிழையால் கடுமையாக சேதமடைந்துள்ளது. இந்தக் கப்பல் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படவில்லை என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

24. 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி

 • நாடு முழுவதும் 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி செய்ய ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
 • மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இப்போது 216 பெரிய ரயில் நிலையங்களில் வைஃபை வசதி உள்ளது. 70 லட்சம் பேர் இதன் மூலம் இலவச இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், நாடு முழுவதும் கிராமப்புறங்கள் உட்பட 8,500 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ரூ.700 கோடியில் இத்திட்டம் அமல்படுத்தப்படும்.

25.உயர் கல்வியில் அதிகம் சேர்பவர்களின் பட்டியல்: முதலிடம் பிடித்து தமிழகம் சாதனை

 • இந்தியாவில் உயர் கல்வியில் அதிகம் சேர்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
 • அகில இந்திய அளவில், 2016 -2017 கல்வியாண்டில் உயர் கல்வியில் சேர்ந்த மாணவ, மாணவியரின் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடுமுழுவதும் 18 -23 வயது கொண்டவர்கள் உயர் கல்வியில் சேரும் அளவை கணக்கிட்டு இந்த பட்டியலில் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நேற்று (வெள்ளிக்கிழமை) இதனை நாடாளுமன்றத்தில் சமர்பித்தார்.

26.ஜனவரி 29-ல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்

 • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதி தொடங்கும் நிலையில், பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
 • இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது:
 • “இந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முதல் நாள் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

27. ஆந்திராவில் திருநங்கைக்கு அரசுப் பணி

 • ஆந்திராவில் திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இம்மாதம் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, இலவச வீட்டு மனைப் பட்டா போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதல்முறையாக, கடப்பா மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை சிவா ஊரஃப் என்கிற ஜானகிக்கு,கட்டிடத் துறையில் டேட்டா என்ட்ரிக்கான பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், கட்டிடத் துறை அதிகாரி ரகுநாதனுக்கு ஜானகி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

28.ஆதார் வைத்திருப்பவர்களுக்கு புதிய ’விர்ச்சுவல்’ அடையாள அட்டை

 • ஆதார் விவரங்கள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்ற கவலை மக்களிடம் அதிகரித்து வரும் நிலையில், புதிய மெய் நிகர் (விர்ச்சுவல்) அடையாள அட்டையை தேசிய தனிநபர் அடையாள ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
 • மத்திய அரசால் நாடு முழுவதும் 90 சதவீதம் பேருக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டுவிட்டது. இந்த ஆதார் அட்டையில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே 12 இலக்க பிரத்யேக எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

29.இஸ்ரோவின் 100-வது செயற்கைக்கோள் கார்டோசாட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது

 • கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக் கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த ராக்கெட் சுமந்து சென்ற 31 செயற்கைக்கோள்களில் இஸ்ரோ தயாரித்த 100வது செயற்கைக்கோளும் ஒன்றாகும்.
 • நாட்டின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துதல், பூமியில் உள்ள இயற்கை வளங்களை ஆராய்தல், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமின்றி, வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.
 • எடை குறைந்த செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகவும், எடை அதிகம் உள்ள செயற்கைக் கோள்களை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகவும் இஸ்ரோ விண்ணில் ஏவிவருகிறது. அந்த வகையில், 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று வெற்றகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

30. இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நாடாக விளங்கும் இந்தியாவை என்எஸ்ஜி.யில் சேர்க்க நடவடிக்கை : அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் தகவல்

 • அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் (என்எஸ்ஜி) இந்தியாவை உறுப்பினராக சேர்க்க இதர உறுப்பு நாடுகளுடன் பேசி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 • இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் இருநாட்டு மக்களின் வளத்தைப் பொருத்தவரை, இந்திய-பசிபிக் பிராந்தியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக கொள்கைகளையும் உடைய சுதந்திரமான, வெளிப்படையான பகுதியாக இந்தப் பிராந்தியம் இருக்கவேண்டும் என இரு நாடுகளும் விரும்புகின்றன.

31. உலக தலைவர்கள் தரவரிசை பட்டியல்: பிரதமர் மோடிக்கு 3-வது இடம்

 • அதில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் உள்ளார். மூன்றாவது இடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
 • நான்காவது இடத்தில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, 5-வது இடத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங், 6-வது இடத்தில் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் உள்ளனர். 7, 8 மற்றும் 9-வது இடங்களில் முறையே சவுதி, இஸ்ரேல், ஈரான் நாட்டு தலைவர்கள் உள்ளனர். பத்தாவது இடத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளார்

32.ராணுவ தினம்: படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

 • ராணுவ தினத்தை முன்னிட்டு படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

33.இஸ்ரேல் பிரதமரை ஆங்கில, ஹீப்ரு மொழி ட்வீட்களில் வரவேற்ற பிரதமர் மோடி

 • விமான நிலையத்தில் இஸ்ரேல் பிரதமரை கட்டித்தழுவி வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ஆங்கிலம் மற்றும் ஹீப்ரு மொழியில் ட்வீட் செய்தபோது, “என் நண்பரே! உங்களை இந்தியாவுக்கு வரவேற்கிறேன். உங்களது இந்திய வருகை வரலாற்றுபூர்வமானது, சிறப்பு வாய்ந்தது. இருநாடுகளுக்கு இடையே உள்ள உறவுகளை மேலும் இது வலுப்படுத்தும்” என்று ட்வீட் பதிவு செய்துள்ளார்.

34. இந்தியா – இஸ்ரேல் இடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து

 • இந்தியா – இஸ்ரேல் நாடுகளிடையே இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம் உற்பத்தி உள்ளிட்டவை தொடர்பாக 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
 • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தரும் இரண்டாவது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவார்.
 • இதனைத் தொடர்ந்து, இந்தியா – இஸ்ரேல் இடையே . இணையவெளி பாதுகாப்பு, மின்சாரம், வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர் பாக 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து, இருவரும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.

தமிழ்நாடு

35.தெற்கு ரயில்வேக்கு 3,351 கோடி ரூபாய் வருவாய்

 • தெற்கு ரயில்வேயில் பயணிகள் ரயில்களின் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் மொத்தம் 53.70 கோடி (537 மில்லியன்) பேர் பயணம் செய்துள்ளனர். இதனால் மொத்தம் ரூ.3,351 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டு வருவாயை ஒப்பிடும்போது 4 சதவீதம் அதிகமாகும்.சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

36.மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டம்: ஆழ்வார்பேட்டையில் ஆய்வு பணிகள் தீவிரம்

 • சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்டப் பணிகள் குறித்து ஆழ்வார்பேட்டையில் லஸ் சர்ச் சாலை, சி.வி.ராமன் சாலைகளையொட்டியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 • சென்னையில் முதல் கட்டமாக 45 கி.மீ.தூரம் நடந்துவரும் மெட்ரோ ரயில் பணிகள் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும்.குறிப்பாக, அண்ணாசாலை யில் டிஎம்எஸ் – சின்னமலை வரையில் வரும் 2018 மார்ச் மாதத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்க, இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

37. 170 மணி நேரம்.. உலகின் நீண்ட யோகா மாரத்தான்: சென்னை பெண் கவிதா கின்னஸ் சாதனை

 • சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த கவிதா (31), 170 மணி நேரங்கள் தொடர்ந்து யோகா செய்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
 • டிசம்பர் 23-ம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கிய அவரின் யோகா பயணம், டிசம்பர் 30-ம் தேதி மாலை 5 மணி வரை நீண்டு சாதனை படைத்துள்ளது.இதைத் தொடர்ந்து பதிவு செய்து வந்த கின்னஸ் அதிகாரிகள், அதே நாளில் சான்றிதழை வழங்கியுள்ளனர்.

38. இனம், மொழி, மதம் வேறுபாடுகளை மறந்து அனைவரையும் ஒன்றுபடுத்துவது இசை: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பெருமிதம்

 • இனம், மொழி, மதம் ஆகிய வேறுபாடுகளை மறந்து மக்கள் அனைவரும் ஒன்றுபட இசை மட்டுமே உதவுகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறினார்.
 • சென்னையில் மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடந்தது.மியூசிக் அகாடமி அரங்கில் நடந்த இந்த விழாவுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமை தாங்கி, என். ரவிகிரணுக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது, வி.கமலாகர் ராவ், ராதா நம்பூதிரி ஆகியோருக்கு ‘சங்கீத கலா ஆச்சார்ய’ விருது, சுகன்யா ராம்கோபால், முத்து கந்தசாமி தேசிகர் ஆகியோருக்கு டிடிகே விருது, முனைவர் டி.எஸ்.சத்யவதிக்கு ‘இசையறிஞர்’ விருது ஆகிய விருதுகளை வழங்கிப் பேசினார்.

39. பேரிடர் நிவாரண மையங்களுக்கு வழங்க ரூ.1 கோடியில் 100 ஜெனரேட்டர்: சென்னை மாநகராட்சி வாங்குகிறது

 • சென்னையில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும்போது பொதுமக்களை தங்க வைக்கும் நிவாரண மையங்களில் மின்சாரம் வழங்க ரூ.1 கோடியில் 100 ஜெனரேட்டர்களை சென்னை மாநகராட்சி வாங்க உள்ளது.

40.அரசின் சேவைகளை வழங்குவதற்கான புதியமின்னாளுமை கொள்கை 2017’: முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்

 • அரசுத்துறைகளில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இருப்பிடம் அருகில், அரசின் சேவைகளை வழங்குவதற்கும் பல்வேறு வழிகாட்டுதல்களையும் தெரிவிக்கும் ‘ மின்னாளுமைக் கொள்கை-2017’முதல்வர் கே.பழனிசாமி நேற்று வெளியிட்டார்.

41.சுகாதாரத்துறை திட்டங்களுக்கு தனி சமூக ஊடக வலைதளம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

 • அரசின் திட்டத்தை விளக்கும் சமூக ஊடக வலைதளத்தை துவக்கி வைத்த அமைச்சர்
 • மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் குறும்படங்களை திரையிட பிரத்யேக சமூக ஊடக வலைதளத்தை (பேஸ்புக், டிவிட்டர், யூடியூப்) அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

42. தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது

 • தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த, ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது
 • கொங்காடை குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளியில் 7-ம் வகுப்பு பயிலும் மாணவனும், ஆய்வுக்குழுத் தலைவருமான, எம்.சின்னக்கண்ணன் இந்த மாநாட்டில் பங்கேற்று, ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, இளம் விஞ்ஞானி பட்டத்தையும், பரிசையும் வென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் மணிப்பூரில் நடைபெற உள்ள இந்திய அறிவியல் மாநாட்டுக்கும் இந்த ஆய்வுக் கட்டுரை தேர்வு செய்யப்பட்டுள்ளது.மாணவர் சின்னக்கண்ணனுக்கு இன்று ஈரோடு கலைக்கல்லூரி சார்பில் பாராட்டு விழா நடக்கிறது.

43.சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு ரூ.99 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

 • சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 விளையாட்டு வீரர்கள், 5 பயிற்சியாளர்களுக்கு ரூ.99 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்.
 • இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2017-ம் ஆண்டு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஜி.லட்சுமணன், எஸ்.ஆரோக்கிய ராஜிவ், ஆர்.மோகன்குமார் ஆகியோர் தங்கப் பதக்கங்கள் வென்றனர்.
 • இதேபோல் கனடாவில் நடந்த 7-வது உலக அளவிலான உயரம் குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் கே.கணேசன், சி.மனோஜ், அ.செல்வராஜ் ஆகியோர் பதக்கங்கள் வென்றனர்.மேலும் உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்ற 9-வது ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பி.விக்காஸ், வி.லெனார்ட், சு.தனுஷ் ஆகியோரும் பதக்கங்களை வென்றனர்.

44. ரூ. 3 கோடி மதிப்பீட்டில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்

 • சிட்லப்பாக்கம் மற்றும் மாடம்பாக்கம் பேரூராட்சி குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.3 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

45. பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை:

 • காவல் துறையின் புதிய வியூகமும் மக்கள் ஒத்துழைப்பும்தான் காரணம் – செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து விவரிக்கிறார் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
 • மக்கள் ஒத்துழைப்பும் காவல்துறையின் புதிய வியூகமும்தான் பெண்கள் பாதுகாப்பில் சென்னைக்கு முதல் இடம் கிடைக்கக் காரணம் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

46. 41-வது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி: ஜன.10 முதல் 22 வரை சென்னையில் நடக்கிறது

 • தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது.40 ஆண்டுகளாக நடந்த கண்காட்சி 41-வது ஆண்டாக வரும் 10-ம் தேதி துவங்க உள்ளது.
 • தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(பபாசி) சென்னை புத்தகக் கண்காட்சியை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறது. சென்னை தவிர மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் பபாசி புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.ஆண்டு தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் 700 அரங்குகள் வரை அமைக்கப்படுகிறது.

47. இந்தியா வழங்கிய ஆம்புலன்ஸ்கள் இலங்கை முழுவதும் விரைவில் இயக்கம்: கூடுதலாக 209 வாகனங்களை வழங்க இந்தியா முடிவு

 • இந்திய அரசு வழங்கிய ஆம்புலன்ஸ்கள் இலங்கை முழுவதும் விரைவில் இயக்கப்பட உள்ளன.
 • பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு முதல் முறையாக 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்றார்.அப்போது இந்தியாவில் செயல்படும் 108 இலவச ஆம்புலன்ஸ் சேவையை இலங்கையிலும் அமல்படுத்த உறுதி அளித்தார்.
 • அதன்பேரில் இந்திய அரசு சார்பில் இலங்கைக்கு ரூ.50.81 கோடி நிதியுதவியும், 88 ஆம்புலன்ஸ் வாகனங்களும் வழங்கப்பட்டன.மேலும் அந்நாட்டு ஊழியர்கள் 600 பேருக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது.

48. வெள்ளையனே வெளியேறுஇயக்கத்தில் தமிழகம் முக்கிய பங்காற்றியது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம்

 • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகம் முக்கிய பங்காற்றியது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
 • சென்னை பல்கலைக்கழகத்தின் இந்திய வரலாற்றுத் துறை சார்பில் ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகத்தின் பங்கு மற்றும் 75-வது ஆண்டு நிறைவு’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கின் தொடக்கவிழா நேற்று நடந்தது.

49.தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூல் பிரெய்லி வடிவில் வெளியீடு

 • தேசிய பார்வையற்றோர் சங்கம் சார்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய ‘உலகின் மிகச் சிறிய தவளை’ என்ற நூல் பிரெய்லி வடிவில் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
 • பார்வையற்றோர் கல்வி கற்பதற்காக ‘பிரெய்லி’ முறையைக் கண்டறிந்த லூயி பிரெய்லியின் 209-வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் சென்னையில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.
 • குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சை நிதி திரட்ட 7-ம் தேதி மாரத்தான் ஓட்டம்
 • குழந்தைகள் புற்றுநோய் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக சென்னையில் மாரத்தான் ஓட்டம் சென்னையில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

50. 4-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் 10-ம் தேதி தொடக்கம்: முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நடந்தது

 • தமிழகத்தின் 4-வது சர்வதேச பலூன் திருவிழா பொள்ளாச்சியில் வரும் 10-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெற உள்ளது.இதில் 6 நாடுகளைச் சேர்ந்த 12 பலூன்கள் பங்கேற்க உள்ளன.
 • சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக சர்வதேச பலூன் திருவிழா கடந்த 3 ஆண்டுகளாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடத்தப்பட்டு வருகிறது.4-வது ஆண்டு பலூன் திருவிழா வரும் 10-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது.

51. இளைய தலைமுறையினரைக் கவர புது வடிவம் பெறும் திருக்குறள்

 • திருக்குறள் சிறந்த இலக்கியம் மட்டுமல்லாது, ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாகவும் உள்ளது. ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கை முறையின் அங்கங்களான பக்தி, சாகச வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, ஈகை, அரசாட்சி, பாதுகாப்பு, நட்பு, காதல் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கின்றன.
 • உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளை அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் செயலரும், டிஎன்பிஎஸ்சி உறுப்பினருமான மு.இராசாராம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரு கிறார்.

52. திருக்குறள்முற்றோதல்திட்டம்

 • இவர் தமிழ் வளர்ச்சித் துறை செயலராக இருந்தபோதுதான் சீன மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது.இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ‘குளோரி ஆஃப் திருக்குறள்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.இந்நூல் 15 பதிப்புகள் செய்யப்பட்டு விற்பனையாகியுள்ளன. இவர் தமிழ் வளர்ச்சித் துறை செயலராக இருந்தபோது 1330 திருக்குறளையும் ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு பரிசளிக்கும் திட்டமான திருக்குறள் முற்றோதல் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.
 • இதன் தொடர்ச்சியாக திருக்குறளை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டுபோய் சேர்க்கும் விதமாக, திருக்குறளை மையமாகக் கொண்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இசை மற்றும் பாரம்பரிய, கிராமிய நடனத்துடன் கூடிய நாடகத்தை உருவாக்கியுள்ளார்.

53. இந்தியாவின் டாப் 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் கோவை ஆர்.எஸ்.புரம்; 5-வது இடத்தில் சென்னை அண்ணாநகர்

 • இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக கோயம்புத்தூரின் ஆர்.எஸ்.புரம் (பி-2), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இதற்கான விருதினை மத்தியப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
 • சிறந்த 10 காவல்நிலைய பட்டியலில் தமிழகத்தின் மற்றொரு காவல் நிலையமாக அண்ணாநகர்(கே-4) தேர்வாகி உள்ளது. இது 5-வது இடத்தில் உள்ளது.

54. ‘ஒன்றே பாரதம் ஒப்பிலா பாரதம்’ திட்டம்: மாமல்லபுரத்தில் ஜம்மு காஷ்மீர் நடன நிகழ்ச்சி

 • ‘ஒன்றே பாரதம் ஒப்பிலா பாரதம்’ என்ற திட்டத்தின்கீழ் மாமல்லபுரத்தில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநில நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன

55.எம்.எல்.ஏ.,க்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

 • எம்.எல்.ஏ.,க்கள் ஊதிய உயர்வு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று (புதன்கிழமை) தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
 • கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை ரூ.55,000-த்திலிருந்து ரூ.1,05,000 ஆக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவையில் முதல்வர் கே.பழனிச்சாமி அறிவித்தார். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உயர்த்தப்பட்ட சம்பளம் நடைமுறைக்கு வருவதாகவும் கூறினார்.

56.இனிமேல் ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்தப்படும்:

 • வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து ஆசிரியர் நியமனம் – கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு
 • தற்போது பின்பற்றப்பட்டுவரும் வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனங்களைத் தொடர்ந்து மேற்கொள்வது என்றும், ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்துவது என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 • தற்போது அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இம்முறையில், தகுதித்தேர்வு, பிளஸ் 2 தேர்வு, பட்டப் படிப்பு, பிஎட் (இடைநிலை ஆசிரியர் எனில் ஆசிரியர் பயிற்சி தேர்வு) ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

57. ஐஏஎஸ், ஐபிஎஸ் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு

 • ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளுக்கான முதன்மைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
 • 2017-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணிகளில் 985 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த அக்டோபர் 28, 30, 31 மற்றும் நவம்பர் 1, 3 ஆகிய 5 நாட்கள் முதன்மைத்தேர்வு நடத்தப்பட்டது.
 • முதன்மைத்தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. அதன்படி, இத்தேர்வில் 2,568 பேர் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 218 பேர் தமிழக மாணவர்கள் ஆவர். நேர்காணல், பிப்ரவரி 2018-ல் தொடங்கும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது. நேர்காணல் முடிந்ததும் முதன்மைத்தேர்வு, நேர்காணல் மதிப்பெண், இடஒதுக்கீடு அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு இறுதி தெரிவுப் பட்டியல் வெளியிடப்படும்.
 • 58.தமிழ்நாடு பொன் விழா ஆண்டு கொண்டாடப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
 • சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதை ஒட்டி தமிழ்நாடு பொன் விழா ஆண்டடாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
 • இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை அவர் வாசித்தார்.
 • அப்போது அவர் கூறுகையில் “ஆளுமைத் திறம்கொண்ட தமிழ்ப் புலவர்கள் ‘தமிழ்நாடு’ என்று வாயாரப் பாடி மனதார அழைத்த நாடு, நம் தமிழ்நாடு! நம்மோடு ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து, ‘பிரசிடன்சி ஆப் மெட்ராஸ்’ என்று ஆங்கிலத்திலும், „சென்னை மாகாணம்’ என்று தமிழிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, மாநில பிரிவினை ஏற்படுத்தப்பட்ட பிறகு, சென்னை மாகாணம் என்னும் பெயரை மாற்றித் ‘தமிழ்நாடு’ எனப் பெயர் மாற்றப்படவேண்டும் என்று அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் அரசின் முன் 1956, ஜூலையில் கோரிக்கையினைக் தியாகி சங்கரலிங்கனார் முன்வைத்தார்.
 • பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு அமைந்தவுடன், 1967-ஆம் ஆண்டு அப்போதைய “சென்னை மாகாணத்திற்கு” ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட, சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 • அதன் தொடர்ச்சியாக, 1969-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ஆம் நாள் ‘தமிழ்நாடு’ என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது.
 • பேரறிஞர் அண்ணா  2-வது உலகத் தமிழ் மாநாட்டினையும், எம்.ஜி.ஆர் 5-வது உலகத் தமிழ் மாநாட்டினையும், ஜெயலலிதா 8-வது உலகத் தமிழ் மாநாட்டினையும் சிறப்பாக நடத்தி, தமிழின் பெருமையையும், தொன்மையையும் உலகறிய செய்தார்கள்.
 • எம்.ஜி.ஆர், தமிழுக்கென்று தனிப் பல்கலைக்கழகத்தை தஞ்சாவூரில் நிறுவினார்கள். மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தை தோற்றுவித்தார்.

58. பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா கோலாகலத் தொடக்கம்: வரவேற்பைப் பெற்ற 2.O, ஆங்கிரி பேர்ட், ஐஸ்கிரீம் வடிவ பலூன்கள்

 • பொள்ளாச்சியில் 4-ம் ஆண்டு சர்வதேச பலூன் திருவிழா தொடங்கியது. இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் முதல் பலூன் பறக்க விடப்பட்டது.
 • அமெரிக்கா, பிரான்ஸ், போலந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய ஆறு நாடுகளைச் சேர்ந்த 12 வெப்ப காற்று பலூன்கள் பறக்க விடப்பட்டன. 8 நாடுகளைச் சார்ந்த 12 பைலட்கள் பங்கேற்றனர் .
 • இதில் தமிழக சுற்றுலா வளர்ச்சித் துறையின் இலச்சினையுடன் கூடிய பலூன், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர உள்ள 2.O 3டி பலூன், ஆங்கிரி பேர்ட், ஐஸ்கிரீம் வடிவில் அமைக்கப்பட்ட பலூன்கள் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

59. எழுத்தாளர் மாலனுக்கு ‘பாரதிய பாஷா’ விருது

 • இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் ‘பாரதிய பாஷா விருது’ இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது.
 • இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று ‘பாரதிய பாஷா’ விருது. இந்த ஆண்டுக்கான ‘பாரதிய பாஷா’ விருது எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது. கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இலக்கிய அமைப்பான ‘பாரதிய பாஷா பரிஷத்’, இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.
 • இந்த அமைப்பு ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதன் படைப்பாளிகளுக்கு ‘பாரதிய பாஷா’ விருது வழங்குகிறது.

60.மார்ச் மாதம் விருது விழா

 • ரூ.1 லட்சம் பரிசுத் தொகைக் கொண்ட இந்த விருது வழங்கும் விழா மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.
 • பாலகுமாரனுக்கு திரு.வி.க. விருது; பா.வளர்மதிக்கு பெரியார் விருது: முதல்வர் கே.பழனிசாமி ஜன.16-ல் வழங்குகிறார்
 • இதன்படி இந்த ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது கோ.பெரியண்ணனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான பெரியார் விருது – பா.வளர்மதி, அம்பேத்கர் விருது- ஜார்ஜ். கே.ஜே., அண்ணா விருது- அ.சுப்பிரமணியன், காமராஜர் விருது- தா.ரா.தினகரன், பாரதியார் விருது- சு.பாலசுப்பிரமணியன் (எ)பாரதிபாலன், பாரதிதாசன் விருது- கே.ஜீவபாரதி, திருவிக விருது- எழுத்தாளர் வை.பாலகுமாரன், கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- ப.மருதநாயகம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
 • விருதுபெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
 • விமான நிலையத்தில் உள்ள வசதிகளைப்போல சேலம், கோவை, மதுரையில் விரைவில் ‘பஸ் போர்ட்’
 • விமான நிலையத்தில் உள்ள வசதிகளைப்போல சேலம், கோவை, மதுரையில் விரைவில், ‘பஸ் போர்ட்’ தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
 • சேலம் மாவட்டத்தில் ரூ.21.97 கோடி மதிப்பில் இரும்பாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

61.இஸ்ரோ தலைவராக தமிழகத்தின் சிவன் நியமனம்

 • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தின் சிவன்.கே நியமிக்கப்பட்டுள்ளார்.
 • ‘இஸ்ரோ’ தலைவர் கிரண் குமாரின் பதவிக் காலம் முடிவதைத் தொடர்ந்து புதிய தலைவராக சிவன்.கே நியமிக்கப்பட்டுள்ளார்.கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருக்கிறார்.
 • சென்னை எம்ஐடியில் 1980-ல் ஏரோனாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடித்து, 1982-ல் பெங்களூரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் எம்இ பட்டமும் மும்பை ஐஐடியில் முனைவர் பட்டமும் பெற்றார். 1982-ல் ‘இஸ்ரோ’வில் பிஎஸ்எல்வி திட்டத்தில் சிவன் முக்கிய பங்காற்றினார். அறிவியல் சேவைக்காக 2014-ல் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டமும் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது உட்பட பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார். 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.

வணிகம்

62.அந்நிய செலாவணி கையிருப்பு 41,112 கோடி டாலர்

 • இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்து 41,112 கோடி டால ராக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் (ஜனவரி 5) 175 கோடி டாலர் உயர்ந்து இந்த மதிப்பை எட்டியுள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 444 கோடி டாலர் உயர்ந்து 40,936 கோடி டால ராக இருந்தது. 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்முறையாக இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 40,000 கோடி டாலரை கடந்தது குறிப்பிடத்தக்கது.

63.பொறுப்புகள் அல்லாத இயக்குநர்களின் தகவல்களை சேகரிக்க திட்டம்: மத்திய அமைச்சர் பிபி சவுத்ரி தகவல்

 • நிறுவனங்களில் எந்தவித பொறுப்புகள் அல்லாமல் உள்ள இயக்குநர்களின் தகவல்களை சேகரிக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய நிறுவனங்கள் துறை இணையமைச்சர் பிபி சவுத்ரி தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனங்கள் நலத்துறை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இதனைத் தெரிவித்தார்.

64.ஒற்றை பிராண்ட் சில்லரை வர்த்தகங்களில் 100% அன்னிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

 • ஒற்றை பிராண்ட்  சில்லரை வர்த்தகத்தில்  100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எளிமையாக தொழில் செய்யவும், அந்நிய முதலீடு அதிகரிக்கவும் அந்நிய நேரடி முதலீட்டிற்கான விதிமுறைகளில் மாற்றங்கள் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 • அதன்படி, ஒற்றை பிராண்ட்  சில்லரை வர்த்தகத்தில் 100 சதவீத நேரடி அந்நிய முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  ஒற்றை பிராண்டுகளில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதி பெற்று 49 சதவீத அளவிற்கு அந்நிய நேரடி முதலீடு செய்ய நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இனிமேல் அரசின் அனுமதியின்றி, 100 சதவீத அளவிற்கும்  இத்துறையில் அந்நிய நேரடி முதலீடு செய்ய முடியும்.

65. 2018-ம் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.5%: மத்திய புள்ளியியல் அலுவலகம் கணிப்பு

 • புள்ளியியல் அலுவலகம் கணித்துள்ளது. கடந்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகி தம் 7.1 சதவீதமாக இருந்தது.
 • நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாத காலத்தில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது. முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 5.7 சதவீதமாக குறைந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் சரிவைக் கண்டது. ஆனால் இரண்டாவது காலாண்டில் பொருளாதார நடவடிக்கைகளில் நேர்மறை மாற்றங்கள் தெரிந்தது. இரண்டாவது காலாண்டு முடிவில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாக வளர்ச்சியடைந்தது. ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக உள்ளது.

66. சாக்லேட் வண்ணத்தில் புதிய 10 ரூபாய் நோட்டு

 • சாக்லேட் பிரவுன் வண்ணத்தில் புதிய 10 ரூபாய் நோட்டை (மகாத்மா காந்தி சீரியஸ்) ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது. இதில் கோனார்க் சூரிய கோயிலின் படம் இருக்கும். 100 கோடி புதிய 10 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் புதிய வடிவமைப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. 10 ரூபாய் நோட்டில் கடந்த 2005-ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு தற்போதுதான் மாற்றம் செய்யப்படுகிறது.

67. இணைய பயன்பாடு சராசரியாக மாதம் 1.6 ஜிபி: ரவி சங்கர் பிரசாத் தகவல்

 • இந்திய வாடிக்கையாளரின் சராசரி இணைய பயன்பாடு மாதம் 1.6 ஜிபி (1600 எம்பி) என மத்திய தகவல் மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருக்கிறார். கடந்த செப்டம்பர் மாத சராசரி பயன்பாடு இது என மக்களவைக்கு அளித்த எழுத்து பூர்வமான பதிலில் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாதம் 70 எம்பி டேட்டா மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

68.முழு நேர ஊழல் கண்காணிப்பு அதிகாரி நியமனம்: பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் திட்டம்

 • பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியமான (செபி) தனது அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் மேற்கொள்ளும் அன்றாட நடவடிக்கைகளை கண்காணிக்க தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரியை (சிவிஓ) நியமிக்க முடிவு செய்துள்ளது.
 • சிவிஓ பதவியானது செயல் இயக்குநர் அந்தஸ்துக்கு இணையானதாகும். அதேபோல ஊதிய விகிதங்களும் அதே அளவுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. செபி செயல்பாடுகளில் தவறுகளைக் கண்டுபிடிப்பதே சிவிஓ-வின் பிரதான பணியாகும்.
 • இத்தகைய பணி நியமனத்துக்கு செபி இயக்குநர் குழுமம் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

69. ஐபிஓ வெளியிட பந்தன் வங்கி திட்டம்

 • கொல்கத்தாவை மையமாகக் கொண்டு இயங்கும் தனியார் துறை வங்கியான பந்தன் வங்கி பொதுப் பங்கு வெளியிட (ஐபிஓ) திட்டமிட்டுள்ளது. அதற்கான வரைவு அறிக்கையை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் நேற்று தாக்கல் செய்துள்ளது. இதன் மூலம் ரூ.2,500 கோடி திரட்டப்படும் என்று தகவல்கள் தெரிவிகின்றன.

விளையாட்டு

70. உலக பிளிட்ஸ் செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்துக்கு வெண்கலம்

 • உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலம் வென்றார்.
 • ரியாத்தில் கடந்த வாரம் உலக விரைவு செஸ் போட்டி நடைபெற்றது. இதில் விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.
 • அதைத் தொடர்ந்து உலக பிளிட்ஸ் செஸ் போட்டி தொடங்கியது. 21 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் 9 வெற்றி, 12 ‘டிரா’, ஒரு தோல்வியைச் சந்தித்தார் ஆனந்த். இறுதியில் மொத்தம் 14.5 புள்ளிகள் பெற்றிருந்த அவர் ரஷ்ய வீரர் கர்ஜாகினுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டார். இதன்மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
 • இப்போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் 16 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றார்

71. புதிய ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ குர்பானி அபாரம்: டெல்லியை வீழ்த்தி ரஞ்சிக் கோப்பையை வென்று விதர்பா வரலாறு!

 • டெல்லி அணிக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விதர்பா அணி வெற்றி பெற்று முதன் முதலாக ரஞ்சி சாம்பியன் ஆகி வரலாறு படைத்தது விதர்பா அணி.

72. செஸ் போட்டியில் ஹரிணி சாம்பியன்

 • திருவாரூரில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில மகளிர் செஸ் சாம்பியின் ஷிப் போட்டியில் சென்னை வீராங்கனை ஹரிணி மாநில மகளிர் சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார்.
 • திருவாரூரில் கடந்த 2-ம் தேதி தொடங்கி மாநில மகளிர் செஸ்போட்டி நடைபெற்றது. நேற்று 9 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி சென்னை.எஸ்.ஹரிணி, திருவள்ளூர் ஒய்.சரண்யா ஆகியோர் எட்டு புள்ளிகள் பெற்றனர். இவர்களில் முன்னேற்ற புள்ளிகள் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த எஸ்.ஹரிணி மாநில மகளிர் சாம்பியன் பட்டத்தை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

73. ஏடிபி டென்னிஸ் சைமன் சாம்பியன்

 • மகாராஷ்டிரா ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் வீரர் கில்லஸ் சைமன் சாம்பியன் பட்டத்தைக் கைப் பற்றினார்.
 • சென்னையில் கடந்த 21 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த ஏடிபி டென்னிஸ் போட்டி இந்த ஆண்டு முதல் மகாராஷ்டிர மாநிலம் புனே வில் நடைபெறுகிறது.
 • நேற்று முன்தினம் நடைபெற்ற ஒற்றையர் இறுதியாட்டத்தில் முன்னணி வீரரான கில்லஸ் சைமன் 7-6 (4), 6-2 என்ற செட் கணக்கில் தென் ஆப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார்.

74.தோனி விக்கெட் கீப்பிங் சாதனையை முறியடித்தார் சஹா!

 • கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இந்தியா 130 ரன்களுக்கு 2-வது இன்னிங்ஸில் சுருட்டியதில் விக்கெட் கீப்பர் சஹாவின் பங்கு மிக முக்கியமாக அமைந்தது.
 • ஒரு டெஸ்ட் போட்டியில் 10 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த வகையில் சஹா புதிய இந்திய சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக 9 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தோனி இந்த டெஸ்ட் சாதனையை தன் வசம் வைத்திருந்தார்.

75. சர்வதேச பனிச்சறுக்கு போட்டி: வெண்கலப் பதக்கம் வென்று இந்திய வீராங்கனை சாதனை;

 • சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் இந்திய வீராங்கனை அன்சால் தாகூர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
 • சர்வதேச பனிச்சறுக்கு கூட்டமைப்பு சார்பில் அல்பைன் எட்ஜர் 3200 கோப்பைக்கான போட்டி துருக்கியில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் மனாலியைச் சேர்ந்த வீராங்கனையான அன்சால் தாகூர் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச அளவிலான பனிச்சறுக்கு போட்டியில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

76. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்பு

 • எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூஸிலாந்தில் இன்று தொடங்குகிறது. இதில் 3 முறை சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

 ஜனவரி 1-15 நடப்பு நிகழ்வுகள் 2018  PDF வடிவம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!