Meesho நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 365 நாட்கள் லீவு எடுத்தாலும் முழு சம்பளம்!

0
Meesho நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 365 நாட்கள் லீவு எடுத்தாலும் முழு சம்பளம்!
Meesho நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு - 365 நாட்கள் லீவு எடுத்தாலும் முழு சம்பளம்!
Meesho நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 365 நாட்கள் லீவு எடுத்தாலும் முழு சம்பளம்!

அரசு ஊழியர்களாக இருந்தாலும் சரி, தனியார் நிறுவன ஊழியர்களாக இருந்தாலும் சரி குறிப்பிட்ட கால அளவை விட அதிக விடுமுறை எடுத்தால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவது வழக்கம் ஆகும். ஆனால் இந்த நடைமுறைக்கு மாறாக, ஊழியர்களின் நலனை கருத்தில் எடுத்துக் கொண்டு 365 நாட்கள் விடுமுறை எடுத்தாலும் சம்பளம் பிடிப்பு இன்றி முழு சம்பளமும் வழங்கப்படும் என நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முழு சம்பளம்:

கடைக்கு சென்று பொருட்களை வாங்கும் நிலை குறைந்து, ஆண்ட்ராய்டு போனை எடுத்து நமக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால், வீட்டிற்கே அந்த பொருட்கள் வந்து சேர்ந்து விடும். அந்த அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்துள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் நமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் பண்ணித்தான் வாங்கி வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றும் வரும் ஈகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக மீஷோ நிறுவனம் உள்ளது. இப்போது எல்லாருடைய போனிலும் மீஷோ ஆப் உள்ளது. இந்த ஆப் user friendly ஆக இருப்பால், மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்து உள்ளது.

Exams Daily Mobile App Download

மீஷோ நிறுவனத்தில் தற்போது 2,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்பதும் இந்த நிறுவனம் சமீபத்தில் 300 மில்லியன் டாலர் திரட்டி யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீஷோ நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு மருத்துவம் மற்றும் மருத்துவம் அல்லாத காரணங்களுக்காக புதிய சம்பள விகிதத்துடன் கூடிய விடுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின்படி ஒரு ஊழியர் வருடம் முழுவதும் அதாவது 365 நாட்களும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை எடுக்க முடியும்.

ஊழியர்கள் தங்களுக்கு தீவிரமான நோய் இருந்தால் அந்த நோய் தீரும் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும், அந்த விடுமுறை காலத்தில் அவருக்கு முழு சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் LKG & UKG வகுப்புகள் விரைவில் தொடக்கம் – அமைச்சர் அறிவிப்பு!

அதேபோல் ஊழியர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தீவிர நோய் இருந்தால் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஊதியத்தில் 25 சதவீதத்தை மூன்று மாதங்களுக்கு பெற முடியும்

அதுமட்டுமின்றி ஊழியர்களுக்கான காப்பீடு, பிஎஃப் சேமிப்பு உள்பட கூடுதல் வசதிகளையும் மீஷோ நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு செய்து கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் மருத்துவம் அல்லாத காரணங்களுக்கு இந்த விடுமுறை திட்டம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!