தமிழகத்தில் LKG & UKG வகுப்புகள் விரைவில் தொடக்கம் – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் LKG & UKG வகுப்புகள் விரைவில் தொடக்கம் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் LKG & UKG வகுப்புகள் விரைவில் தொடக்கம் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் LKG & UKG வகுப்புகள் விரைவில் தொடக்கம் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் தற்போது 1 – 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து அரசு பள்ளிகளில் விரைவில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எல்.கே.ஜி, யு.கே.ஜி:

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் 13ம் தேதி அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என அனைத்தும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 12-ஆம் வகுப்பிற்கு ஜூன் 20-ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பிற்கு ஜூன் 27-ஆம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்றும் 1ஆம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுந்து வந்தது. தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக பல்வேறு தகவல்கள் வெளியானது.

Exams Daily Mobile App Download

கடந்த 2019ம் ஆண்டு 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் பெருநகரங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. இங்கு 3 – 4 வயது குழந்தைகள் எல்கேஜி வகுப்பிலும், 4-5 வயது குழந்தைகள் யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். இந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் ஆங்கில வழி கற்றல் என்பதால் அரசு எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கையும் அதிகரித்தது. இந்த நிலையில் ல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்பட்டால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறையும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

Reliance Jio பயனர்கள் கவனத்திற்கு – சூப்பரான ரீசார்ஜ் திட்டங்கள்!

எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ரத்து செய்யப்படவில்லை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தான் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2022 – 2023 ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்காக சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக 2,500 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!