குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள சமூகப்பணியாளர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.09.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் |
பணியின் பெயர் | சமூகப்பணியாளர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:
சமூகப்பணியாளர் மற்றும் ஆற்றுப்படுத்துநர் பதவிக்கு திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
TN Job “FB
Group” Join Now
சமூகப்பணியாளர் கல்வி தகுதி:
பட்டதாரி/ முதுகலை பட்டதாரி (10+2+3 முறை), சமூகப்பணி/உளவியல்/ வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஆற்றுப்படுத்துநர் கல்வி தகுதி:
பட்டதாரி (10+2+3 முறை), உளவியல், சமூகவியல் அல்லது சமூகப்பணியில் பிரிவில் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.
தமிழக அரசு பணிக்கான அனுபவம்:
- குறிப்பாக குழந்தைகளுக்கு ஆலோசனை சேவைகளை வழங்குவதில் 2 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.
- கணினி இயக்குதல் அனுபவம் அவசியம்.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
குறிப்பு:
மேற்கண்ட பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமான ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களாகும். இது மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகையால் இதனை அடிப்படையாக கொண்டு எவ்விதத்திலும் அரசு பணி கோர இயலாது. மேலும் மேற்கண்ட பணியிடங்களுக்கு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
தங்கள் விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் 10.09.2021ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் அறை எனள்:633, 6வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர், என்ற முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்பப்பட வேண்டும். மேலும் விபரங்கள் தேவைப்படின் தொலைபேசி எனர்.0421-2971198-க்கு தொடர்பு கொள்ளவும்.