தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு – அமைச்சர் விளக்கம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு - அமைச்சர் விளக்கம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு - அமைச்சர் விளக்கம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் முறைகேடு – அமைச்சர் விளக்கம்!

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது அரசு சார்பாக 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் முறைகேடுகள் நடத்திருப்பதாகவும், தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது. இது குறித்து உணவுத்துறை அமைச்சர் தற்போது விளக்கம் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரசு சார்பாக பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத்தொப்பு குறித்து பல புகார்கள் வந்துள்ளது. அதாவது பரிசுத் தொகுப்பில் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், அரிசி, கோதுமை மாவு, வெல்லம் போன்ற பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார்கள் எழுந்தது.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம் – மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சட்ட ரீதியான அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த புகார் தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், வெல்லம் உருகிவிட்டதாகவும், மிளகுக்குப் பதிலாக வேறு பொருள் கொடுத்ததாக வந்த புகாரை அவதூறு பரப்புவர்கள் ஊதி பெருசாக்கி விட்டார்கள். தவறு என்றால் தனது கட்சிக்காரராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

அதனை தொடர்ந்து அங்காடிகளுக்கு சென்று பொருட்களை பார்வையிட்டார். மேலும் பொருட்களை முறையாக சோதனைக்கு உட்படுத்தாமல் விட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களை தற்காலிக பணி நீக்கம் செய்தார். அத்துடன் தரமற்ற பொருட்களை வழங்கிய 5 நிறுவனங்களுக்கு ரூ.7.04 கோடி அபராதம் விதிக்கப்பட்டது என்று கூறியுள்ளார். மேலும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மீது குற்றம் சாட்டுபவர்க்ளுக்கு ஒன்று சொல்ல விருப்பபடுகிறேன். அதாவது எந்த பழிச் சொல்லையும் பொருட்படுத்தாமல் திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!