மூத்த குடிமக்களுக்கு மேல் பெர்த் ஒதுக்கியதால் ரயில் பயணி கண்டிப்பு – IRCTC விளக்கம்!

32
மூத்த குடிமக்களுக்கு மேல் பெர்த் ஒதுக்கியதால் ரயில் பயணி கண்டிப்பு - IRCTC விளக்கம்!
மூத்த குடிமக்களுக்கு மேல் பெர்த் ஒதுக்கியதால் ரயில் பயணி கண்டிப்பு - IRCTC விளக்கம்!
மூத்த குடிமக்களுக்கு மேல் பெர்த் ஒதுக்கியதால் ரயில் பயணி கண்டிப்பு – IRCTC விளக்கம்!

வயதான மூத்த குடுமக்களுக்கு ரயிலில் மேல் பெர்த் ஒதுக்கியதால் பயணி கோவப்பட்டு ஐஆர்சிடிசி நிறுவனத்தை கண்டித்து ஒரு பதிவு ஒன்றை சமூக வலைப்பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதற்கு தற்போது IRCTC விளக்கமளித்துள்ளது.

IRCTC விளக்கம்

ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவர் தற்போது சமூக வலைப்பக்கங்களில் ஐஆர்சிடிசி நிறுவனத்தை கடுமையாக கண்டித்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, ரயிலில் முன்பதிவு செய்தபோது தனது குடும்பத்தின் மூத்த குடிமக்களுக்கு மேல் பெர்த் ஒதுக்கியதற்காக பயணி இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் நிறுவனத்தை கடுமையாக கண்டித்துள்ளார். அதாவது, வயதானவர்களால் எப்படி மேல் பெர்த்துக்கு செல்ல முடியும் என கேட்டுள்ளார்.

மேலும், பயனர்களின் விவரங்களை சரி பார்க்காமலேயே எப்படி பெர்த் ஒதுக்கி தருகிறீர்கள் எனவும், நீங்கள் டிக்கெட்டை உருவாக்க எந்த வகையான மென்பொருளை பயன்படுத்துகிறீர்கள் எனவும் கேட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் நீங்கள் பொது மக்களுக்கு வழங்கும் ரயில்வே சேவை இதுதானா என கேட்டுள்ளார். அதற்கு ரயில்வே நிர்வாகம் தகுந்த பதிலை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்திய ரயில்வேயில் கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு முறையின் மூலமாக தான் பயணிகளுக்கான முன்பதிவு செய்யப்படுகிறது.

தமிழக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

முன்பதிவு செய்யப்பட்ட பின்பு மூத்த குடிமக்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் பயணிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பெர்த் சௌகரியமாக இல்லையெனில் தானாகவே கீழ் பெர்த் ஒதுக்குவதற்கான வசதி இருக்கிறது. மேலும், பயணிகள் முன்பதிவு செய்யும்போது எந்தெந்த பெர்த்கள் காலியாக இருக்கிறதோ அதை பொறுத்து தான் பெர்த்கள் போடப்படுகின்றன. பின்னர், பயணம் செய்யும் போது டிக்கெட் சரிபார்க்கும் ஊழியர்களின் அனுமதியுடன் பெர்த்களை மாற்றம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

32 COMMENTS

 1. மூத்தப்பயணிகள் ஏன் ரெயிலில் பயணம் செய்ய வேண்டும்? வயதான கிழங்கள் நான்கு சுவருக்குள்ளே வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டியது தானே? இப்படி யெல்லாம் மோடி அரசு நினைத்து செயல்படுகிறதோ? என எண்ணத் தோன்றுகிறது.

 2. மூத்த குடி மக்களுக்கு வழங்கிய பயண டிக்கெட் சலுகைகள் நிறுத்த பட்டுள்ளது.இது முதியோருக்கு செய்யும்.துரோகம். இப்போது கீழ் பெர்த் கொடுக்க வில்லை என்று புகார். ஏன் இந்த ரயில் வே நிர்வாகம் மூத்த குடி மக்களை கஷ்ட படுத்துகிறது ஏன்று புரியவில்லை.

  • இது உண்மையே. ஆனாலும், சில சமயங்களில் கீழ் பெர்த் கிடைத்த இளைஞர்/இளைஞிகள் கூட அட்ஜஸ்ட் செய்து கொள்ள மறுக்கின்றனர். கூடிய வரை இரயில்வே நிர்வாகம் அதனால் முடிந்த வசதியை செய்து கொடுக்கத் முயற்சி செய்கிறது.

 3. IRCTC should change this attitude.. They should accept the flaw in the software and change it instead of giving this unacceptable explanation.. I too one of the impacted person.. For my 71 yes mother was allotted upper birth.. Dt: 24 Aug 22, Train: Yarcad express.. Coach:S1.

  If the system unable find the lower berth, then it should throw message, based on passengers confirmation it should proceed further.. Not custer friendly IRCTC and it’s software.

 4. டிக்கட் புக் செய்யும் போதே தெரியாதா டிக்கட் அப்பர் பெர்த் ஆ அல்லது காத்திருப்பு பட்டியலா என்று தெரிந்துதானே டிக்கட் பதிவு செய்கிறார்கள். முன் வந்தவர்க்கு முன்னுரிமை என்கிற அடிப்படையில் புக் செய்யப் படுகிறது. முன்கூட்டி டிக்கட் வாங்கி இருக்க வேண்டியதுதானே?

 5. This ha0ens years before itself. Atleast now you are having sr. Ctz quota. While booking itself we can know about the availability. We cannot assume that while travelling tr should give. In my experience even very young people don’t oblige elders. This is of course not always.

 6. தவறுகளுக்கும் குறைபாடுகளுக்கும் வக்காலத்து வாங்கும் நிலைமை உள்ளவரை இந்த தேசத்தில் எதையும் சரி செய்ய இயலாது. குறைபாடுகளை களைய முயற்சி செய்ய எண்ணற்ற வழிகள் நவீன உலகில் வசதி வாய்ப்புகள் உள்ளது. மனம் மட்டுமே வேண்டும்.

 7. இதில் IRTCஐ குறை செல்வதற்கு ஒன்றுமில்லை. முதலில் புக் செய்யப்பட்டது போக மீதி காலியாக இருக்கும் (available vacant berths) பெர்த்துகளைத்தான் ஒதுக்க இயலும். காலியாக இல்லாத பெர்த்துகளை
  எப்படி மறுபடியும் கொடுக்க இயலும்? மேலும் senior citizenகளுக்கு என்று தனி quota உண்டு. இதில் காலி பெர்த் உள்ளதா என்று தெரிந்த பிறகு புக் செய்ய வேண்டும்.
  Counterரில் சென்று புக் செய்தால் கீழ் berth இருந்தால் மட்டுமே புக் செய்யப்பட்ட வேண்டும். கடைசி நேரத்தில் புக் செய்தால் கிடைக்காது. பயணிகளுக்குள் adjust செய்துகொள்ள வேண்டியதுதான்.. நானும் ஒரு seniir citizen தான். இதில் மோடியை குறை கூறுவது நகைப்புக்கு உரியது.

 8. நான் 73 வயது. 25 நாள் முன்பே பதிவு செயதும் மேல் பர்த் தான் கிடைத்தது. ஆனால் பயணத்தின் போது உடன் பயணித்த இருவர் தத்தல் முறையில் இரண்டு நாள் முன்பு பதிவு செய்த்தாக கூறினர். அவர்கள் இருவருக்கும் lower berth allot செய்யப்பட்டிருந்த்து.

 9. முதியவர்களில் பெரும்பாலோர் வழிபாட்டு தலங்களுக்கும், மருத்துவத்திற்க்காகவும் இரயில் பயணத்தை விரும்புகிறார்கள். பல வருடங்களாக அவர்களுக்கு இருந்த இரயில் பயண சலுகைகள் இரத்தானதால், அவர்களை இரயில் பயணத்தை தவிர்க்கிறார்கள் என்ற அந்த நிருவனத்தின் சமீபத்திய அறிக்கை சொல்கிறது. ஆட்சியாளர்கள் முதியவர்களாக இருந்தும், முதியவர்களின் நலனின் அக்கறை செலுத்தாது வேதனைக்குரியது.

 10. I am frequently travelling and as a senior citizens, always get lower berth. Though no concession in fare is given, at least some lower berths are reserved for Sr citizens. In this particular case, railway official might have done mistake or the quota might have been exhausted at the time of booking. Fighting with TTR or blaming IRCTC is not correct. At the time of booking ticket, ask for lower berth. For valid reasons, if lower berth is not allotted, don’t travel.

 11. திருகிருஷ்ணன் ஒருநாள் மூத்தோர் பட்டியலில் வரலாம் அப்பொழுது இதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும்

 12. I too wanted to register my views. Many of the times whenever I book tickets for my Wife and me we land up getting upper and middle berths. We are in our 60 :s. Many a times TTE also does not help stating availability. Unable to climb upper birth we had to either sit in somebody’s lower Berth. While booking there is an option asking for Prefered Berths and Coaches. Then why? We clearly state our age and our preference then why this. This really pains us. Nowadays even youngsters having lower berths turns down our request/ Plea. As stated based on age factor IRCTC to find out a suitable app to help senior citizens like us. This is only a plea to IRCTC

 13. கிருஷ்ணன் சொன்னது சரியானது தான்…….முதலில் book செய்வது lower birth…. அடுத்து middle Bertha….. கடைசியில் book செய்வது…..upper birth…..train வளைவில் திரும்பும்போது. முதலில் upper berth reserve சைதால் வண்டி கவிள chance உண்டு……..

 14. It is total atrocity of Central government not giving concession to Sr citizens
  Ministers and bureaucrats are enjoying with full facilities of IRCTC

 15. Senior citizens should be respected by allotting lower berth. Why the Indian railways had cut their concession?. Kindly consider them. .

 16. This is my experience. We had booked the tickets properly for lower berth. But we sought upgradation. In the upgradation we were allotted upper and middle berth. Their carelessness made us suffer.

 17. If lower berth is not available you can reject the booking and payment will be credited back. I always book Sr citizen lower birth option to book ticket. And book well in advance.

 18. Dharmalingam உங்கள் வீட்டில் கிழங்களை முடக்கி வைத்திருக்கிறீர்களா அல்லது முடங்கி கிடக்கிறார்களா? நீங்கள் கிழம் ஆகும்போது முடக்கப்படுவீர்களா? முடங்கிக் கொள்வீர்களா? ‘காய்ந்த ஓலையைப் பார்த்து பச்சை ஓலை சிரித்ததாம்.’ தானும் ஒரு நாள் காயத்தான் போகிறோம் என்பது தெரியாமல்!

 19. It is true ie sr. Czn not get lower berth allotment. We experienced when Kasi yatra travel with family team of 9 nos. From Chennai though tickets booked
  one month advance time. 3 persons 75 and 2 are above 65 remains 62+
  Need not to be mention the hardships.

 20. முன் பதிவு செய்யும் போதே மூத்த குடிமக்களுக்கென்ற கோட்டா உள்ளது.அது தீர்ந்த பின் எப்படி லோயர் பெர்த் கிடைக்கும்.இளைய வயதினரே அட்ஜஸ்ட் செய்யாதபோதுமென்பொருள் என்ன செய்யும்

 21. Globalisation. Money is the only criteria. Senior citizens all the concessions were cut. 60 வயதுக்கு மேல் உள்ளவர்களால் பொருளாதார சுமைதான். அவர்களை கடலிலல் தூக்கி எறியபடவேண்டியவர்கள் என்று கருதுகிறார்கள்.

 22. When a senior citizen book his tickets the software should show the availability of lower births in the train senior citizen quota as well as General quota. Depending on the availability the ticket can be booked. In the last 5 years I always got lower births for myself and for my wife. Book your tickets well in time. Stop allotting lower birth tikets to VIP quota and other quotas

 23. வீட்டிலே முடங்கி கிடக்கவேண்டியது தானே என்கிற பதிவை பார்த்தேன் வருத்தமாக இருந்தது. பதிவு செய்யப்பட்ட வருக்கு ஒருநாள் வாந்தி வயித்தாலை வரும்போது தான் முதியோருக்கு நினைவு வரும். அனைத்து முதியோருக்கும் கீழ் பெர்த் முன்னுரிமை கொடுத்தால் என்ன
  ரயில்கெட்டு போயிருமா அல்லது நாடு கெட்டு விடுமா.எங்களை சிந்தியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!