தமிழக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலைவாய்ப்பு கிடைக்காத மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உதவித்தொகை அறிவிப்பு

தமிழக அரசு பணிகளில் சேர வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது கட்டாயம். இதில் பதிவு செய்வதன் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில் அரசு பணி வழங்கப்படுகிறது. தற்போது அரசு பணிகள் பெரும்பாலும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படுவதால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது காத்திருப்போரின் எணிக்கையை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அரசு வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து அதை புதுப்பித்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலை கிடைக்காதவர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் அரசு சார்பாக மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த உதவித்தொகை கல்வித்தகுதியில் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஓா் ஆண்டுக்கும் மேலாக காத்திருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இவ்வாறாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை இனி மாதந்தோறும் வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் புதிதாக 10,000 தபால் நிலையங்கள்? மத்திய அரசின் திட்டம்!

இந்த திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் 600 ரூபாயும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 750 ரூபாயும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். இந்த உதவி தொகையானது பதிவு செய்து 10 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!