ரூ.36,000/- ஊதியத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

0

ரூ.36,000/- ஊதியத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

25.04.2022 அன்று இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் (IRCON) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Finance Assistant, HR Assistant, IT Incharge ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை (09.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் என்பதால் இப்பொழுது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட்டில் (IRCON) காலியாக உள்ள Finance Assistant பணிக்கு என 08 இடமும், HR Assistant பணிக்கு என 05 இடமும், IT Incharge பணிக்கு என 03 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த துறைகளில் CA, CMA, Post Graduation, Diploma, Engineering Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.36,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
  • மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
IRCON விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். பின் பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 90.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

IRCON Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!