IPL 2021: 46 பந்தில் 106 ரன்கள் விளாசல்! பயிற்சி போட்டியில் வாண வேடிக்கை காட்டிய டிவில்லியர்ஸ்!

0
IPL 2021 46 பந்தில் 106 ரன்கள் விளாசல்! பயிற்சி போட்டியில் வாண வேடிக்கை காட்டிய டிவில்லியர்ஸ்!
IPL 2021 46 பந்தில் 106 ரன்கள் விளாசல்! பயிற்சி போட்டியில் வாண வேடிக்கை காட்டிய டிவில்லியர்ஸ்!

IPL 2021: 46 பந்தில் 106 ரன்கள் விளாசல்! பயிற்சி போட்டியில் வாண வேடிக்கை காட்டிய டிவில்லியர்ஸ்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்குள்ளான பயிற்சி போட்டியில் வாண வேடிக்கையுடன் சதமடித்து டிவில்லியர்ஸ் அசத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வாண வேடிக்கை காட்டிய டிவிலியர்ஸ்:

ஐபிஎல் போட்டிகளின் இரண்டாம் கட்ட ஆட்டம் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவலினால் ரசிகர்கள் இன்றி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கினாலும், தொற்றின் தாக்கத்தால் நிறுத்தி வைக்கப்பட்டது.

IPL 2021 திருவிழா ஆரம்பம் – போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி! 

மீண்டும் இப்போட்டிகள் வரும் செப் 19 முதல் அமீரகத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக ஒவ்வொரு அணியும் தங்களின் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இந்த முறை கோப்பை வென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் பெங்களூர் அணி பயிற்சியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே சிராஜ் மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

IPL 2021 – CSK அணியுடன் இணைந்த கடைக்குட்டி சிங்கம் சாம் கரன்! ரசிகர்கள் உற்சாகம்!

தற்போது பெங்களூர் அணி வீர்ரகள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி போட்டியில் விளையாடினர். அதில் களம் கண்ட அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ் 46 பந்துகளில் 104 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 7 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களும் அடங்கும். 4 மாதங்களுக்கு பிறகு பேட்டை கையிலெடுத்த டி வில்லியர்ஸ் இப்போட்டியில் விளாசி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. மேலும் பெங்களூர் அணி வீரர்கள் சிறப்பாக பயிற்சியினை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகிறது. நடப்பு தொடரில் அந்த அணி 5 வெற்றிகளுடன் பட்டியலில் 3 இடம் பெற்று பிளேஆப் வாய்ப்பில் நீடிக்கிறது குறிப்பிடத்தக்கதாகும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!