IPL 2021 திருவிழா ஆரம்பம் – போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி! 

0
IPL 2021 திருவிழா ஆரம்பம் - போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி! 
IPL 2021 திருவிழா ஆரம்பம் - போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி! 

IPL 2021 திருவிழா ஆரம்பம் – போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி! 

இந்த ஆண்டு அமீரகத்தில் நடைபெறவுள்ள IPL போட்டிகளின் இரண்டாம் கட்ட ஆட்டத்தினை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ரசிகர்களுக்கு அனுமதி:

இந்தியாவில் வருடந்தோறும் நடைபெறும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் போட்டிகள் ஆகும். கடந்த முறை கொரோனா தொற்றினால் ஒத்திவைக்கப்பட்ட இந்த போட்டிகள் பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ரசிகர்கள் இன்றி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கினாலும், தொற்றின் தாக்கத்தால் அவை நிறுத்தி வைக்கப்பட்டது.

IPL 2021 – CSK அணியுடன் இணைந்த கடைக்குட்டி சிங்கம் சாம் கரன்! ரசிகர்கள் உற்சாகம்!

மீண்டும் இப்போட்டிகள் வரும் செப் 19 முதல் அமீரகத்தில் நடைபெறவுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்காது என்றே முதலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது வரை பயிற்சியில் சில வீரர்கள் தனிமைப்படுத்துதலில் உள்ளனர். அவர்கள் பூரண குணம் அடைந்தால் மட்டுமே களம் காணுவர் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ரசிகர்களுக்கு போட்டிகளை காண அனுமதி வழங்கி போட்டி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிக்க 46 பக்க பாதுகாப்பு அம்சங்களை கொண்ட ஒரு வழிகாட்டுதலை வெளியிட்டு உள்ளது. போட்டி நடைபெறவுள்ள துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய 3 மைதானங்களிலும் இதனை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

‘முடிந்தது சகாப்தம்’ – கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றார் லசித் மலிங்கா!

போட்டிகளை காண விரும்பும் ரசிகர்கள் செப் 16 முதல் டிக்கெட்டுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த அனுமதியினால் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

To Book the Tickets – Click Here

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!