செப்., 19 முதல் மீண்டும் துவங்கும் IPL 2021 திருவிழா – ஆரம்பமே CSK Vs MI, ரசிகர்கள் கொண்டாட்டம்!
கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக கடந்த மே மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டதான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் போட்டிகள், வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியில் மீண்டுமாக துவங்க உள்ளது. அதற்கான போட்டி அட்டவணைகள் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
IPL போட்டிகள்
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற IPL போட்டிகள், இந்த ஆண்டும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பாதிப்புகள் சற்றே உயர்ந்து வந்த நிலையில், வீரர்களுக்கான பாதுகாப்பு வலையத்தை தாண்டி கொரோனா தொற்று பாதிப்பு உருவானது. அதாவது IPL கிரிக்கெட் போட்டிகளை சேர்ந்த 4 அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் உட்பட்ட பலருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 39,361 பேருக்கு கொரோனா – 416 பேர் உயிரிழப்பு!
இதை தொடர்ந்து, கடந்த மே மாதம் 2 ஆம் தேதி முதல் IPL போட்டிகள் நிறுத்தப்பட்டு, மீதமுள்ள போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டது. இப்போட்டியில் 29 லீக் ஆட்டங்கள் மட்டும் முடிவடைந்துள்ள நிலையில், மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு எமீரகத்தில் நடத்த திட்டமிட்ட இந்திய கிரிக்கெட் கவுன்சில், தற்போது அதற்கான போட்டி நடைபெறும் தேதிகளையும், அட்டவணைகளையும் வெளியிட்டுள்ளது. இப்போட்டியானது செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் துவங்கி அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
IPL ன் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த இரண்டு அணிகளுக்குமே பலத்த ரசிகர்கள் கூட்டம் இருப்பதால், ஸ்வாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது என்பது தெளிவாகியுள்ளது. இதை தொடர்ந்து UAE யில் 27 நாட்கள் நடைபெறும் போட்டியில், மொத்தமாக 31 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. மேலும் அக்டோபர் 10 ஆம் தேதியில், தகுதிச்சுற்று மற்றும் இறுதி ஆட்டங்களும் துபாய் மைதானத்தில் நடைபெற உள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும் ஷார்ஜா மைதானத்தில் 10 ஆட்டங்கள் நடைபெறுகிறது. அபுதாபியில் 8 ஆட்டங்கள் நடைபெறுகிறது. புள்ளிப்பட்டியலை பொருத்தளவு, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும். CSK 10 புள்ளியுடன் 2 ஆம் இடத்திலும், RCB 10 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் 8 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளது. தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் 5, ராஜஸ்தான் ராயல்ஸ் 6, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7, ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி 8 ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.