IPL 2024: ரன் மழையை கொட்டி தீர்த்த SRH vs MI ஆட்டம் – பல சாதனை முறியடிப்பு!

0
IPL 2024: ரன் மழையை கொட்டி தீர்த்த SRH vs MI ஆட்டம் - பல சாதனை முறியடிப்பு!

மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் ஐபிஎல் நடப்பாண்டு போட்டிகளில் நேற்றைய ஆட்டம் இரண்டு அணிகளுக்கு இடையிலான பலப்பரிட்சையாக அமைந்தது.

சாதனைகள் முறியடிப்பு:

2024 ஐபிஎல் தொடரின் எட்டாவது போட்டியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டி ஹைதராபாத் மைதானத்தில் தொடங்கியது. முன்னதாக பேட்டிங்கை பிடித்த ஹைதராபாத் அணி சரமாரியாக ரன்களை அடித்து தள்ளியது. 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 277 ரன்களை குவித்து ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை எட்டியது.

இரண்டாவதாக களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 278 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு களம் இறங்கியது. மும்பை அணியின் வீரர்கள் இலக்கை அடைய ரன்களை குவித்த போதிலும் 20 ஓவர் முடிவில் 246 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவினர். நேற்றைய போட்டி இதற்கு முன் இருந்த பல்வேறு சாதனைகளையும் முறியடித்து சாதனை பட்டியலில் முன்னிடத்தில் பிடித்துள்ளது.

சாதனை பட்டியல்:

  • ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டங்களின் சாதனை பட்டியலில் இது முதலாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
  • அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட ஆட்டங்களில் இது முதலாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
  • அதிக பவுண்டரிகள் (4+6) அடிக்கப்பட்ட ஆட்டங்களின் பட்டியலில் சென்னை – ராஜஸ்தான் அணிகளுடன் முதலிடத்தை இது பிடித்துள்ளது.
  • அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட ஆண்கள் டி20 போட்டிகளிலும், அதிக ரன்கள் அடிக்கப்பட்ட டி20 போட்டிகளிலும் இது முதலிடத்தை பிடித்துள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

அஞ்சலக பணி தேர்வின் தேர்ச்சி பட்டியல் – வலுக்கும் கோரிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!