அஞ்சலக பணி தேர்வின் தேர்ச்சி பட்டியல் – வலுக்கும் கோரிக்கை!

0
அஞ்சலக பணி தேர்வின் தேர்ச்சி பட்டியல் - வலுக்கும் கோரிக்கை!

அஞ்சலகப் பணிக்கான தேர்வை எழுதி பல மாதங்களை கடந்த நிலையிலும் இன்னும் தேர்ச்சி பட்டியல் வெளியாகாத நிலையில் இது குறித்த கோரிக்கை அரசுக்கு வலுத்து வருகிறது.

தேர்ச்சி பட்டியல்:

2023 ஏப்ரல் 30ஆம் தேதி அன்று தமிழகத்தின் அஞ்சல் வட்டத்தில் அஞ்சல் காரர், அஞ்சல் பாதுகாவலர், பன்முக பணியாளர் போன்ற பணிகளுக்கான துறை ரீதியிலான தேர்வுகள் நடத்தப்பட்டது. தேர்வுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் அஞ்சல் காரர், அஞ்சல் பாதுகாவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் முன்னதாக வெளியிடப்பட்டது. ஆனால் பன்முகப் பணியாளர் பணிக்கான தேர்வில் 3000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் கடந்த நவம்பர் 23ஆம் தேதி தேர்வின் மதிப்பெண் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியாகவில்லை.

ESIC மருத்துவமனையில் ரூ.67,700/- மாத சம்பளத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே!

இதனால் பன்முகப் பணியாளருக்கு பணி மூப்பு, சம்பள இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும், மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு நெருங்கி விட்டது. இதனால் நடப்பு ஆண்டு தேர்வில் கலந்து கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவித்த போதிலும் மகாராஷ்டிரா, பீகார் மாநிலங்களில் தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டதை போலவே மேலும் காலதாமதம் செய்யாமல் தமிழகத்தில் அஞ்சலக பன்முகப் பணியாளர் தேர்ச்சி பட்டியலை வெளியிட வேண்டும் என்று அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!