IPL 2022: சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் ரசிகர்களுக்கு ஷாக் – சைமன் கட்டிச் திடீர் விலகல்!

0
IPL 2022: சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் ரசிகர்களுக்கு ஷாக் - சைமன் கட்டிச் திடீர் விலகல்!
IPL 2022: சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் ரசிகர்களுக்கு ஷாக் - சைமன் கட்டிச் திடீர் விலகல்!
IPL 2022: சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் ரசிகர்களுக்கு ஷாக் – சைமன் கட்டிச் திடீர் விலகல்!

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் உதவி பயிற்சியாளருமான சைமன் கட்டிச் IPL மெகா ஏலத்திற்குப் பிறகு தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பயிற்சியாளர் விலகல்

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2022 போட்டிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான ஏலம் தற்போது முடிவுற்றுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் போட்டிகளில் பங்கேற்பதில் ஆர்வமுடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியின் உதவி பயிற்சியாளருமான சைமன் கட்டிச் IPL மெகா ஏலத்திற்கு பிறகு தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இளையராஜா பாடல்களை பயன்படுத்த பிரபல நிறுவனங்களுக்கு இடைக்கால தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதாவது, SRH அணியின் உரிமையை நிர்வகிக்கும் விதத்தில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றும் ஏலத்தின் போது ஏலத்திற்கு முந்தைய திட்டங்கள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்றும் அவரது விலகளுக்கான முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ட்ரெவர் பெய்லிஸ் மற்றும் பிராட் ஹாடின் ஆகியோர் ராஜினாமா செய்ய முடிவு செய்த நிலையில், சைமன் கட்டிச் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து SRH அணியின் இயக்குநராக இருக்கும் டாம் மூடி, சைமன் கட்டிச்சை தனது உதவியாளராக நியமித்து IPL 2022 மெகா ஏலத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள அதிர்ச்சிகரமான தகவலின் படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து கட்டிச் பிரிந்துவிட்டதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையானது கடந்த ஆண்டு தொடக்கத்தில் SRH அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சர்ச்சைக்குரிய வகையில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மூன்றாம் உலகப்போர் தொடக்கம்? உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளி கட்டிடத்தில் குண்டுவீச்சு! தொடரும் பதற்றம்!

அதாவது, IPL 2021 போட்டியின் முதல் கட்டத்தில் மோசமான செயல்திறன் காரணமாக அட்டவணையில் கடைசி இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை முழுமையாக மாற்றியமைக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதனால் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கேப்டன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தொடர்ந்து கேன் வில்லியம்சன் அப்போதைய அணிக்கு தலைமை தாங்கினார். அந்த நேரத்தில் அணியின் சமநிலையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதில் இருக்கும் நியாயத்தை வார்னர் புரிந்து கொண்டதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!