IPL 2022 RR Vs GT: 4வது வெற்றி யாருக்கு? இன்றைய ஆட்டத்திற்கான முன்னோட்டம்!

0
IPL 2022 RR Vs GT: 4வது வெற்றி யாருக்கு? இன்றைய ஆட்டத்திற்கான முன்னோட்டம்!
IPL 2022 RR Vs GT: 4வது வெற்றி யாருக்கு? இன்றைய ஆட்டத்திற்கான முன்னோட்டம்!

IPL 2022 சீசனில் இன்று (ஏப்ரல் 14) நடைபெற இருக்கும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியுடன் பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. இந்த ஆட்டத்தில் ஜெயிக்கும் அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்ய உள்ளது.

இன்றைய ஆட்டம்

கடந்த மார்ச் மாதம் 26ம் தேதியன்று துவங்கி தற்போது நடைபெற்று வரும் 15வது சீசனுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளின் 24வது லீக் ஆட்டம் இன்று (ஏப்ரல்.14) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் ஒரே தர வரிசையில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியுடன் மோதுகிறது. இந்த சீசனில் மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இவ்விரு அணிகளும் இதுவரை 4ல் 3 போட்டிகளில் வென்று 6 புள்ளிகளை பெற்றுள்ளது. இப்போது இன்று நடைபெறும் ஆட்டத்தில் எந்த அணி தனது 4வது வெற்றியை பதிவு செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியை பொறுத்தவரை ஜோஸ் பட்லர், கேப்டன் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதே போல IPL போட்டிகளில் அறிமுக அணியாக இருந்தாலும் குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறது. இந்த அணியை பொறுத்தமட்டில் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷுப்மான் கில் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சு பிரிவில், ரஷித் கான் இன்னும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் அவர் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைவார்.

8 ஆம்‌ வகுப்பு படித்தவர்க்கு காத்திருக்கும் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

இவரை தவிர GT அணியில் லாக்கி பெர்குசன், முகமது ஷமி ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஒட்டு மொத்தத்தில் சரிசமமான பலத்துடன் காணப்படும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதும் ஆட்டத்தில் ஸ்வாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாகி இருக்கிறது. அந்த வகையில் பேட்டிங்கு உகந்த மைதானமாக திகழும் மும்பை DY பட்டீல் ஸ்டேடியத்தின் பவுண்டரி தூரம் குறைவு என்பதால் இந்த 2 அணிகளும் ரன் வேட்டை நடத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (C & WK), ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், குல்தீப் சென், ரவிச்சந்திரன் அஷ்வின், பிரசித் கிருஷ்ணா, டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல்

குஜராத் டைட்டன்ஸ்: மேத்யூ வேட் (WK), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (C), அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், தர்ஷன் நல்கண்டே, லாக்கி பெர்குசன், முகமது ஷமி

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!