IPL 2021 : தோல்வியில் இருந்து மீளுமா கோஹ்லியின் படை? RCB vs CSK இன்று மோதல்!

0
IPL 2021 தோல்வியில் இருந்து மீளுமா கோஹ்லியின் படை RCB vs CSK இன்று மோதல்!
IPL 2021 தோல்வியில் இருந்து மீளுமா கோஹ்லியின் படை RCB vs CSK இன்று மோதல்!
IPL 2021 : தோல்வியில் இருந்து மீளுமா கோஹ்லியின் படை? RCB vs CSK இன்று மோதல்!
ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெற இருக்கும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதற்கான பிட்ச் ரிப்போர்ட், உத்தேச அணி விவரம் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்த அலசலை இங்கு காணலாம்.
RCB vs CSK இன்று பலப்பரீட்சை:
ஐபிஎல் இன்று நடக்க உள்ள 34வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2ம் கட்டத்தின் முதல் ஆட்டத்தில் மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் ஊதி தள்ளியது. பலம் வாய்ந்த சென்னை அணி பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மும்பைக்கு எதிரான முந்தைய போட்டியில் டுபிளசி, மொயின் அலி, ரெய்னா, டோனி என அனைவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். ஆனாலும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் நிலைத்து நின்று ரன்கள் குவித்து அசத்தினார். அவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜடேஜா மற்றும் இறுதி கட்டத்தில் அதிரடி காட்டிய பிராவோ என இவர்களால் சென்னை அணி 150 ரன்களை கடந்தது. இதனால் இன்றைய போட்டியில் பேட்டிங்கிலும் தவறை சரி செய்து களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பந்து வீச்சில் சென்னை அணி அசத்தியதால் தான் வெற்றியை வசப்படுத்தியது. அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் களமிறங்கும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது முந்தைய போட்டியில் கொல்கத்தா அணியிடம் 92 ரன்களில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. அபாயகரமான பேட்டிங் வரிசையை கொண்டிருந்த போதும் யாரும் நிலைத்து நிற்காததினால் 100 ரன்களை கூட தொட முடியவில்லை. பந்து வீச்சிலும் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது. பர்பிள் கேப் பெற்ற ஹர்ஷல் பட்டேலும் ஜொலிக்கவில்லை. இந்த தவறுகளை சரி செய்து இந்த போட்டியில் வலுவான சென்னை அணியை வீழ்த்த பல்வேறு திட்டங்களையும் பயிற்சியினையும் மேற்கொண்டு வருகிறது, பெங்களூர் அணி. புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி 2வது இடத்திலும், பெங்களூர் அணி 3வது இடத்திலும் உள்ளன.
இப்போட்டியில் வெற்றி பெற்று சென்னை அணி முதலிடம் செல்ல முனைப்பு காட்டும். அதே நேரத்தில், வெற்றியை வசப்படுத்தி தனது  இடத்தினை தக்க வைத்துக் கொள்ள பெங்களூர் அணி போராடும். இவ்விரு அணிகள் மோதிய முந்தைய ஆட்டத்தில் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
பிட்ச் ரிப்போர்ட்:
இன்றைய போட்டி நடக்க இருக்கும் ஷார்ஜா மைதானம் பேட்டிங்கிற்கு உகந்தது. 200 ரன்களை கூட எளிதில் சேஸ் செய்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதனால் இன்றைய ஆட்டத்தில் அதிரடிக்கு பஞ்சமிருக்காது. இவ்விரு அணிகள் இது வரை 28 முறை  மோதியுள்ளது. அதில் சென்னை 18 முறை வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. பெங்களூர் அணி 9 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்திற்கு முடிவு இல்லை.
உத்தேச 11 அணி விவரம்:
பெங்களூர் அணி: விராட் கோலி (C), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (WK), க்ளென் மேக்ஸ்வெல், ஏபி டிவில்லியர்ஸ், சச்சின் பேபி, வனிந்து ஹசரங்கா, கைல் ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்
சென்னை அணி : ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன்/ஜோஷ் ஹேசில்வுட், எம்எஸ் தோனி (C & WK), டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!