ICC டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பம் – பாடல் அறிமுகம்!

0
ICC டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பம் - பாடல் அறிமுகம்!
ICC டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பம் - பாடல் அறிமுகம்!
ICC டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆரம்பம் – பாடல் அறிமுகம்!

வரும் அக்டோபர் மாதம் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ள 2021 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடக்க உள்ள நிலையில், ஐசிசி போட்டிகளுக்கான பாடலை அறிமுகம் செய்துள்ளது.

டி20 உலகக்கோப்பை:

2021 ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியா சார்பில் நடத்தப்பட உள்ளது. இது டி20 உலகக்கோப்பை போட்டியின் 7ம் ஆண்டாகும். 2020ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த இத்தொடர் கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்தது. போட்டிகள் ஜூலை மாதம் இந்தியாவில் நடக்க இருந்த நிலையில் மேலும், கொரோனா அச்சம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் மாதம் நடக்க உள்ளது.

CTET தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – நகரங்கள் அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் இந்த தொடரின் தீம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. தீம் பாடலின் வீடியோ ஐசிசி, பிசிசிஐ மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சோஷியல் மீடியா ஹேண்டிலில் வெளியாகி உள்ளது. சுமார் 40 தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர். இதற்கான பாடலை பாலிவுட் சினிமா இசையமைப்பாளர் அமித் திரிவேதி கம்போஸ் செய்துள்ளார்.

செப்.24ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர்!

மொத்தம் 1.30 நிமிடங்கள் ஓடும் இந்த பாடலை அனிமேஷன் வீடியோவாக தயாரித்துள்ளனர். வீடியோவில் இந்திய கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸ் அணியின் பொல்லார்ட் மாதிரியான வீரர்கள் ஹைலைட் செய்யப்பட்டுள்ளனர். நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டிகள் குறித்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வரும் நிலையில், தீம் பாடல் வெளியிடப்பட்டுள்ளதால் மேலும் குஷியாகியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!