IPL 2021 : ஆட்ட நாயகன் முதல் ஆரஞ்சு கேப் வரை – விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்!

0
IPL 2021 : ஆட்ட நாயகன் முதல் ஆரஞ்சு கேப் வரை - விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்!
IPL 2021 : ஆட்ட நாயகன் முதல் ஆரஞ்சு கேப் வரை – விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்!

நேற்றுடன் முடிவுக்கு வந்த இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் CSK அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன், மொத்த சீசன்களிலும் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

IPL விருதுகள்

தற்போது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா அணியை பந்தாடி 4வது முறையாக டிராபியை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வரை இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த IPL போட்டிகள் கொரோனா 2ம் அலை காரணமாக இடை நிறுத்தி வைக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் மீண்டுமாக துவங்கியது.

TNPSC, SSC போட்டித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அக்.20 முதல் இலவச பயிற்சி!

அந்த வகையில் ஐக்கிய அரபு எமீரகத்தில் வைத்து 2வது ஆட்டங்களை துவங்கிய அணிகளில் ஒவ்வொரு சுற்றாக முன்னேறி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு தகுதியானது. இதை தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் சுற்றில் பெங்களூரு அணியையும், அடுத்த சுற்றில் டெல்லி அணியையும் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த 2 அணிகளும் நேற்று (அக்.15) துபாயில் வைத்து நடைபெற்ற இறுதி போட்டியில் பலப்பரீட்சை கண்டது.

போட்டியின் முதல் ஆட்டத்தில் விளையாடிய CSK அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. இதில் பாப் டூ பிளெஸ்சிஸ் 86 ரன்கள் பெற்று கடைசிப்பந்தில் ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து 193 ரன்களை சேஸ் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. அந்த வகையில் KKR அணி இந்த ஆண்டுக்கான IPL டிராபியை சுமார் 27 ரன்கள் வித்தியாசத்தில் நழுவ விட்டது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி 4வது முறையாக IPL கோப்பையை வென்று சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த போட்டிக்கு பிறகு, இந்த ஆண்டு IPL சீசனில் சிறப்பாக விளையாடியவர்களுக்கான விருதுகள் அளிக்கப்பட்டது. அந்த விருதுகளை பெற்ற வீரர்களின் விவரம் பின்வருமாறு:

  • IPL சாம்பியன் – சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இறுதிச்சுற்று ஆட்ட நாயகன் – டூ பிளெஸ்சிஸ் (CSK)
  • மதிப்புமிக்க வீரர் (போட்டி நாயகன்) – ஷர்ஷல் படேல் (RCB)
  • பேர்பிளே விருது – ராஜஸ்தான் ராயல்ஸ்
  • வளரும் வீரர் – ருதுராஜ் (CSK)
  • அதிக சிக்ஸர்கள் – கே.எல். ராகுல் (PBKS)
  • சூப்பர் ஸ்டிரைக்கர் – ஹெட்மையர் (DC)
  • பவர்பிளேயர் – வெங்கடேஷ் ஐயர் (KKR)
  • சிறந்த கேட்ச் – பிஸ்னோய் (PBKS)
  • கேம் சேஞ்சர் – ஷர்ஷல் படேல் (RCB)
  • அதிக ரன்கள் – ருதுராஜ் கெயிக்வாட் (CSK)
  • அதிக விக்கெட்டுகள் – ஷர்ஷல் படேல் (RCB)

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!