TNPSC, SSC போட்டித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அக்.20 முதல் இலவச பயிற்சி!

1
TNPSC, SSC போட்டித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அக்.20 முதல் இலவச பயிற்சி!
TNPSC, SSC போட்டித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு - அக்.20 முதல் இலவச பயிற்சி!
TNPSC, SSC போட்டித் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அக்.20 முதல் இலவச பயிற்சி!

மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்தகைய பயிற்சி வகுப்புகள் அக்.20 தேதி தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலவச பயிற்சி:

மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர். அத்தகைய தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் பங்குகொள்கின்றனர். எனினும் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சியை இழந்து வெளியேறி விடுகின்றனர். இதற்கு அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாதது ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் இதனால் அவர்களது உழைப்பும், முயற்சியும் வீணாகி விடுகின்றது. தற்போது நடந்து முடிந்த UPSC தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருந்தாலும் முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என ஒவ்வொரு நிலையிலும் தேர்வர்கள் முறையான பயிற்சியின்மையால் வெளியேறி விட்டனர். எனினும் தற்போது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த காது கேளாத, பார்வையற்ற மாற்றுத்திறனாளி ரஞ்சித் என்பவர் இந்திய அளவில் 750 இடம் பெற்று UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் தேர்வில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பங்குபெற வேண்டும் என்று அவர் கூறினார். அவ்வாறு பங்குகொள்வதற்கு அரசு சார்பில் பயிற்சி அளிக்க கூடிய நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். அதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல்நோக்கு பணியாளர், பெண்கள் படைபயிற்றுவிப்பாளர், மருத்துவ உதவியாளர் போன்ற 3,261 பணியிடங்களை நிரப்ப SSC ஆணை வெளியிட்டுள்ளது. இத்தகைய தேர்வுக்கு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கூறியதன் அடிப்படையில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் அக்-20 தேதி முதல் SSC தேர்வுக்கான பயிற்சி தொடங்கவிருப்பதாக அம்மாநில மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் இப்பயிற்சியில் சேர விரும்பும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அம்மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரில் அல்லது 0436 6224226 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் அதிகாரபூர்வ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவு செய்து அதில் பதிவேற்றம் செய்துள்ள பாடக்குறிப்புகள், மாதிரி வினாக்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!