IOCL நிறுவனத்தில் காத்திருக்கும் Apprentices வேலை – 473 காலியிடங்கள் || 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
IOCL நிறுவனத்தில் காத்திருக்கும் Apprentices வேலை - 473 காலியிடங்கள் || 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Apprentices பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 473 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IOCL
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 473
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online

IOCL காலிப்பணியிடங்கள்:

IOCL நிறுவனத்தில் காலியாக உள்ள Apprentices பிரிவின் கீழ் வரும் Technician Apprentices, Trade Apprentices, Data Entry Operator, Domestic Data Entry Operator ஆகிய பணிகளுக்கென மொத்தமாக 473 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Apprentices கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரிகளில்  பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

Technician Apprentices – ITI / Diploma

Trade Apprentices – Bachelor’s Degree

Data Entry Operator – 12ம் வகுப்பு

Domestic Data Entry Operator – 12ம் வகுப்பு

Apprentices வயது வரம்பு:

12.01.2024 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 18 வயது முதல் 24 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Apprentices ஊக்கத்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் Apprenticeship விதிமுறைப்படி மாத ஊக்கத்தொகை பெறுவார்கள்.

IOCL தேர்வு முறை:

இந்த IOCL நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL விண்ணப்பிக்கும் முறை:

Apprentices பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.01.2024 அன்று முதல் 01.02.2024 அன்று வரை https://plapps.indianoilpipelines.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!