Airtel வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!

0
Airtel வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!
Airtel வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!
Airtel வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!

ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு சில புதிய டேட்டா திட்டங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இதுவரை செயல்பட்டு வந்த பழைய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அந்நிறுவனம் நீக்கியுள்ளது.

டேட்டா திட்டம்

ஏர்டெல் நெட்வொர்க்கின் வாடிக்கையாளர்கள் இதுவரை பயன்படுத்தி வந்த 3 வகையான ப்ரீபெய்ட் திட்டங்களை அந்நிறுவனம் நிறுத்தியுள்ளது. அதன் படி லைப் இன்ஷுரன்ஸ் சலுகைகளுடன் மேலும் 2 ரீசார்ஜ் பிளான்களையும் இனி வாடிக்கையாளர்கள் உபயோகப்படுத்த முடியாது. இது குறித்து ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.279, ரூ.179 மற்றும் ரூ.45 மதிப்பிலான ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக் திட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் ரூ.279 மற்றும் ரூ.179 ஆகிய இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் லைப் இன்ஷுரன்ஸ் சலுகைகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஜூலை 31 வரை சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு!

இந்த 3 ரீசார்ஜ் திட்டங்களுக்கு பதிலாக ரூ.128 மதிப்பிலான புதிய ஸ்மார்ட் ரீசார்ஜ் பேக்கை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது ஏர்டெல் நிறுவனம் நிறுத்தியுள்ள ரூ.279 ரீசார்ஜ் பேக் மூலம் வாடிக்கையாளர்கள் 28 நாட்கள் வரை தினசரி 1.5 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS, அன்லிமிடெட் கால் உள்ளிட்ட சலுகைகளை வழங்கியது. கூடுதலாக இந்த ரீசார்ஜ் பேக்குடன் ஷா அகாடமியின் நான்கு வார கோர்ஸ், விங்க் மியூசிக்கின் ஃப்ரீ அக்ஸஸ், ரூ.4 லட்சம் மதிப்புள்ள HDFC லைப் இன்ஷுரன்ஸ் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவையின் ப்ரீமியம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன.

தற்போது நீக்கப்பட்டுள்ள ரூ.279 ரீசார்ஜ் பேக்குக்கு பதிலாக ரூ.249 ரீசார்ஜ் பேக் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த பிளானை பொருத்தளவு, லைப் இன்ஷுரன்ஸ் சலுகைகள் கிடைக்காது. இந்த பேக்குடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடட் கால், ஒரு நாளைக்கு 100 SMS உடன் கூடுதலாக 28 நாட்கள் வரை ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக்கிற்கான இலவச சந்தா, பயனர்களின் பாஸ்டாக் பரிவர்த்தனைக்காக ரூ.150 கேஷ்பேக் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவில் இலவசமாக ஒரு மாத அக்ஸஸ் கொடுக்கப்படுகிறது.

ATM கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதி – பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிவிப்பு!!

அதே போல ரூ.179 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துக்கு பதிலாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ.298 மதிப்பிலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்கை பயன்படுத்தலாம். இந்த ரீசார்ஜ் பேக் 28 நாட்கள் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடட் கால்ஸ், தினசரி 100 SMS, அமேசான் பிரைம் வீடியோ அக்ஸஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக்கிற்கான இலவச சந்தா, ஃபாஸ்டாக் பரிவர்த்தனைக்கு ரூ.150 கேஷ்பேக் கிடைக்கிறது. மேலும் புதிய ரூ.128 பேக் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் லோக்கல் மற்றும் STD அழைப்புக்கு 2.5 பைசா மற்றும் SMS களுக்கு ரூ.1 மற்றும் ரூ.1.5 வசூலிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!