போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள் அறிமுகம்!

0
போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - புதிய மாற்றங்கள் அறிமுகம்!
போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - புதிய மாற்றங்கள் அறிமுகம்!
போஸ்ட் ஆபீஸில் கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள் அறிமுகம்!

போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களுக்கு, இந்திய அஞ்சல் துறை முக்கியமான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

புதிய மாற்றங்கள்:

மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. மேலும் கொரோனா காலகட்டத்தில் நாடு முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது, இந்த வகையில் தற்போது சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்த மக்கள் வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். இந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான சில அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் உள்ள புதிய மாற்றங்கள், மோசடியை தடுக்க உதவும் என குறிப்பிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

1. முதலில் போஸ்ட் ஆபீஸில் எந்த விதமான முதலீடு கணக்கு வைத்திருந்தாலும் ,அவர்கள் பான் எண், மொபைல் நம்பரை அந்த கணக்குடன் இணைக்க வேண்டும்

2.மேலும் ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. போஸ்ட் ஆபீஸில் இருக்கும் அனைத்து திட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்களும் அக்கவுண்ட்-ஐ முடித்துக் கொள்ளும்போது அக்கவுண்ட் புத்தகத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் தொடர்புடைய அக்கவுண்ட்டில் கடைசியாக வரவு வைக்கப்பட்ட பரிவர்த்தனை குறித்த விவரம் குறிக்கப்பட வேண்டும்.

IPL 2022: ஏலத்தில் 8 கோடி ரூபாய் அடிப்படையில் விளையாட தயார் – சாஹல் பேட்டி!

4. போஸ்ட் ஆபிஸில் இருக்கும் எந்த ஒரு அக்கவுண்ட் என்றாலும், அது நிறைவு பெறும் சமயத்தில் அல்லது முன்கூட்டியே முடித்துக் கொள்ளும் சமயத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கு கட்டாயம் ஒப்படைக்க வேண்டும்

5. பான் கார்டு இல்லாத வாடிக்கையாளர்களிடம் படிவம் 60/61 வாங்கப்பட வேண்டும், தபால் நிலைய கணக்கு தொடங்கியவர்களிடம் அனைத்து கேஒய்சி ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும்.

6.ரூ.20,000க்கு மேல் பணம் அனுப்பும்போது, பெறும்போதும் மொபைல் நம்பரை சரிபார்க்க வேண்டும்.

இந்த புதிய மாற்றங்கள் குறித்து மேலும் விவரங்களுக்கு 1800 266 6868 என்ற இலவச உதவி மையத்தை தொடர்பு கொண்டு, வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!