ஆவின் நிறுவனத்தின் 12 வகை கேக்குகள் அறிமுகம் – பண்டிகை கால விற்பனை!

0
ஆவின் நிறுவனத்தின் 12 வகை கேக்குகள் அறிமுகம் - பண்டிகை கால விற்பனை!
ஆவின் நிறுவனத்தின் 12 வகை கேக்குகள் அறிமுகம் - பண்டிகை கால விற்பனை!
ஆவின் நிறுவனத்தின் 12 வகை கேக்குகள் அறிமுகம் – பண்டிகை கால விற்பனை!—

ஆவின் நிறுவனம் தற்போது வர இருக்கும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு புதிதாக கேக் வகைகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஆவின் கேக்குகள்:

தமிழக அரசின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், அவர்களின் நலனிற்காகவும் பால் ஆலைகளை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்து, அவற்றை சுத்திகரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறது.

Follow our Instagram for more Latest Updates

தனியார் பால் விலையை காட்டிலும் ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலையானது குறைவாக நிர்ணயம் செய்யப்படுகிறது. இதைத்தவிர பால் பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகளையும் ஆவின் விற்பனை செய்கிறது. இந்நிலையில், வர இருக்கும் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி லாப நோக்கத்தில் அல்லாமல், பொதுமக்கள் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் குறைவாக விலையில், நிறைவான தரத்துடன் கூடிய கேக் வகைகளை ஆவின் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத்தொகை? அரசுக்கு முக்கிய கோரிக்கை!

Exams Daily Mobile App Download

அதன்படி, பிளம் கேக், டெத் பை சாக்லேட் கேக், ரெட் வெல்வெட் கேக், பிளாக்கரண்ட் கேக், ரெயின்போ கேக், பட்டர்ஸ்காட்ச் கேக், ஒயிட் பாரஸ்ட் கேக், பைனாப்பிள் கேக், ஸ்ட்ராபெரி கேக், சாக்கோ ட்ரிபிள், பிளாக் பாரஸ்ட் கேக், போன்ற 12 வகையான கேக்குகளை 80 கிராம், 400 கிராம் மற்றும் 800 கிராம் அளவுகளில் ரூ.70 முதல் ரூ.800 வரை விற்பனை செய்கிறது. இந்த கேக்குகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!