SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அக்.9 முதல் 11 வரை இணைய வங்கி சேவைகள் நிறுத்தம்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - அக்.9 முதல் 11 வரை இணைய வங்கி சேவைகள் நிறுத்தம்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - அக்.9 முதல் 11 வரை இணைய வங்கி சேவைகள் நிறுத்தம்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அக்.9 முதல் 11 வரை இணைய வங்கி சேவைகள் நிறுத்தம்!

வழக்கமாக மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியின் இணைய வங்கி மற்றும் யோனோ சேவைகள் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி சேவைகள்

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு மாதமும் மேற்கொள்ளப்படும் SBI வங்கியின் வழக்கமான பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக இணைய வங்கி சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக SBI வங்கியில் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் இரண்டு முறை இணைய வங்கி சேவைகள் நிறுத்தப்பட்டன.

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அக்.9ம் தேதி பொது விடுமுறை – இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

இந்த செயலிழப்பு மூலம் SBI வங்கியின் யோனோ ஆப் மற்றும் பிற ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்படும் என SBI வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக SBI வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எங்களது நிறுவனத்தில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வரும் அக்டோபர் 9ம் தேதி இரவு 12.20 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 2.20 மணி வரை சுமார் 120 நிமிடங்களுக்கும், அக்டோபர் 10ம் தேதி இரவு 11.20 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 1.20 மணி வரை சுமார் 120 நிமிடங்களுக்கும் இணைய வங்கி சேவைகள் நிறுத்தப்படும்.

TN TRB போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வயது வரம்பை உயர்த்த பரிசீலனை!

இந்த காலகட்டத்தில் இணைய வங்கி, யோனோ, யோனோ லைட் மற்றும் UPI சேவைகள் கிடைக்காது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு, இந்த பராமரிப்பு நடவடிக்கைகள் இரவில் மேற்கொள்ளப்படுகிறது குறிப்பிடத்தக்கது. எனினும் இதன் மூலமாக SBI வங்கியின் இணைய வங்கி, யோனோ மற்றும் UPI சேவைகளைப் பயன்படுத்தும் சுமார் 250 மில்லியன் பயனர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது கூடுதல் தகவல்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!