சர்வதேச செய்திகள் – ஜூலை 2019

0

சர்வதேச செய்திகள் – ஜூலை 2019

இங்கு ஜூலை மாதத்தின் சர்வதேச செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் ஜூலை 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF –ஜூலை 2019

2020 முதல் விமான டிக்கெட்டுகளுக்கு பிரான்ஸ் பசுமை வரி விதிக்க உள்ளது

  • குறைந்த மாசுபடுத்தும் போக்குவரத்து திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக பிரான்சில் உள்ள விமான நிலையங்களிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களின் விமான டிக்கெட்டுகளுக்கு 18 € வரை வரி விதிக்க பிரெஞ்சு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய நடவடிக்கை ஆண்டுக்கு சுமார் 182 € மில்லியனைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
  • இந்தத்தொகையை பசுமைப் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்ய குறிப்பாக ரயில் சேவையில் செய்ய திட்டமிட்டுள்ளது, . நாட்டிலிருந்து வெளிசெல்லும் விமானங்களுக்கு மட்டுமே இந்த வரி விதிக்கப்படும் என்றும் நாட்டிற்குள் வரும் விமானங்களுக்கு அல்ல என்றும் போக்குவரத்து அமைச்சர் எலிசபெத் போர்ன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஹஜ்ஜில் பெண்கள் சமத்துவத்திற்கான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை சவுதி அரேபியா ஏற்றுக்கொண்டது

  • சவூதி அரேபியாவிற்கு இந்தியர்கள் ஹஜ் பயணமானது ஏராளமான இந்தியா ஹஜ் யாத்ரீகர்களை சென்றடைவதற்கான இந்திய அரசின் பெருமுயற்சி திட்டமான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொண்டது.
  • இந்தியன் ஹஜ் தகவல் அமைப்பு செயலி – தூதரகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் கருத்து மற்றும் குறைகளை தெரியப்படுத்தலாம். மேலும் சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதர்கள் யாத்ரீகர்களுடன் ஒரு தொடர்பை உருவாக்கும் முயற்சியாக இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையை மேம்படுத்த மற்றும் தொந்தரவில்லாத ஹஜ் பயணத்தை மேற்கொள்ளவும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இடம்பெயர்ந்தவர்களுக்காக  முன் கட்டப்பட்ட வீடுகளை இந்தியா மியான்மரிடம் ஒப்படைப்பு.

  • இடம்பெயர்ந்தவர்களின் பயன்பாட்டிற்காக மௌங்கிடாவ்வில் முன் கட்டப்பட்ட 250 வீடுகளை இந்தியா மியான்மரிடம் ஒப்படைத்தது .இந்தியா தனது ராகைன் மாநில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த திட்டத்தை மேற்கொண்டதாக வெளிவிவகார அமைச்சகம் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இத்திட்டம் 25 மில்லியன் செலவில் ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா – தைவானுக்கு இடையே 2.2 பில்லியன் ஆயுத விற்பனையக்கு  அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல்.

  • 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை தைவானுக்கு விற்க அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. ஆயுதங்களில் ஆப்ராம்ஸ் டாங்கிகள் மற்றும் ஸ்டிங்கர் ஏவுகணைகள் இருந்தன என்று பென்டகன் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ஆயுத விற்பனையை உடனடியாக ரத்து செய்யுமாறு சீனா வாஷிங்டனை வலியுறுத்திவருகிறது.

ஐ.நா.வின் புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதி தெற்கு சூடானில் அமைதி காக்கும் படையினரை ஊக்குவித்தார்

  • தெற்கு சூடானில் ஐ.நா.வின் புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் ஷைலேஷ் சதாஷிவ் தினாய்கர் சமீபத்தில் ஜூபாவில் பொறுப்பேற்றுள்ளார். தினாய்கர் மே மாதம்  ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் ஆல் நியமனம் செய்யப்பட்டார்.தளபதியாக பொறுப்பு  ஏற்றுக்கொண்ட பிறகு, படைத் தளபதி அமைதி காக்கும் படையினரை சந்தித்தார்.  பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் சிரமங்களை சமாளித்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என அவர்களை ஊக்குவித்தார்..

அபுதாபியில் ISA வின் முதல் கூட்டு பாதுகாப்பு பயிற்சி ISALEX19

  • அபுதாபியில் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு கூட்டணியின் முதல் கூட்டு பாதுகாப்பு பயிற்சியில் 50 சட்ட அமலாக்க அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். 2017ல் தொடங்கப்பட்ட இந்த சர்வதேச பாதுகாப்புக் கூட்டணி, ஒழுங்கமைக்கப்பட்ட, நாடுகடந்த மற்றும் தீவிரவாத குற்றங்களை எதிர்கொள்ளும் ஒரு சர்வதேச செயற்குழு ஆகும்.

ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளை நியூசிலாந்து தடை செய்தது

  • ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஷாப்பிங் பைகளை நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ளது. தடையை மீறும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனையாக 100,000 நியூசிலாந்து டாலர்கள் (67,000 அமெரிக்க டாலர்) அபராதம் விதிக்கப்படும். புதிய விதிகளின் கீழ், மெல்லிய பிளாஸ்டிக் ஒற்றை பயன்பாட்டு ஷாப்பிங் பைகளை இனி வழங்க தடை விதிக்கப்படுள்ளது, ஆனால் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட யுரேனியம் வரம்பை ஈரான் மீறுகிறது

  • 2015 அணுசக்தி ஒப்பந்தத்தால் நிர்ணயிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பான 300 கிலோகிராம் வரம்பை மீறிவிட்டது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் முகமது ஜவாத் ஜரீஃப் கூறியுள்ளார்.

2025 க்குள் சுகாதார சேவைகளின் செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% ஆக  அரசு  உயர்த்தவுள்ளது

  • 2025 க்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக சுகாதார சேவை செலவுகளை உயர்த்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். சுகாதார சேவைகளுக்கான பொதுச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.  பாலஸ்தீன அகதிகள் நிறுவனத்திற்கு 2019 ஆம் ஆண்டில் 5 மில்லியன் அமெரிக்க டாலர் பங்களிப்பு செய்வதாக இந்தியா உறுதியளித்துள்ளது

  • ஐ.நா. பாலஸ்தீன அகதிகள் நிறுவனத்திற்கு 2019 ஆம் ஆண்டில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது. அந்த ஏஜென்சியின் நிதி நிலைமை குறித்து கவலை தெரிவித்ததுடன், அதன் பணிகளுக்கு தொடர்ச்சியான நிதி உதவியை உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்திய கூறியுள்ளது.

பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது

  • சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக குழு மூன்று ஆண்டுகளுக்கு பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டாலர் கடன் வழங்க முறையான ஒப்புதல் அளித்துள்ளது, பாகிஸ்தானில் பெருகிவரும் கடன்களை கட்டுப்படுத்தவும், பணம் செலுத்தும் நெருக்கடியைத் தடுக்கவும் சுமார் 1 பில்லியன் டாலர்களை உடனடியாக வழங்க அனுமதித்துள்ளது மீதமுள்ளவற்றை காலாண்டு மறு ஆய்வுக்கு உட்பட்டு, திட்டத்தின் கால கட்டத்திற்குள் வழங்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

பிரஞ்சு அரசு இணைய நிறுவனங்களுக்கு 3% வரி விதிக்கவுள்ளது 

  • கூகிள், அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற இணைய நிறுவனங்களுக்கு ஒரு சிறிய வரி விதிப்பதற்கு பிரான்சின் கீழ் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. குறைந்த வரியை உடைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தலைமையகத்தை அமைப்பதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் வரிகளைத் தவிர்ப்பதைத் தடுப்பதை இந்த மசோதா நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, ​​நிறுவனங்கள் பிரான்ஸ் போன்ற பெரிய விற்பனையைக் கொண்ட நாடுகளில் கிட்டத்தட்ட வரி செலுத்தவில்லை.

இந்தியாவின் முசோரியில் 1800 வங்கதேச அரசு ஊழியர்களுக்கு பயிற்சி

  • ஆயிரத்து எண்ணூறு வங்கதேச அரசு ஊழியர்களுக்கு 2019-2025 க்கு இடையில் முசோரியில் உள்ள தேசிய நல்லாட்சிக்கான மையத்தில் (என்.சி.ஜி.ஜி) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தியா-வங்கதேச கூட்டு ஆலோசனை ஆணையத்தின் (ஜே.சி.சி) ஐந்தாவது கூட்டத்தில் இந்த ஆண்டு பிப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வங்கதேச அரசு ஊழியர்களுக்கு தேசிய நல்லாட்சிக்கான மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் மற்றும் சீனா இடையே பல்வேறு துறைகளின் கீழ் ஒன்பது ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்பட்டன

  • பங்களாதேஷுக்கும் சீனாவுக்கும் இடையே ஒன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன இதில் மியான்மரில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயற்த்தப்பட்ட ரோஹிங்கியாக்களுக்கு சீனா 2,500 மெட்ரிக் டன் அரிசியை பங்களாதேஷுக்கு வழங்கப்பட்டதும்  ஒரு பகுதியாகும். ஒன்பது ஒப்பந்தங்களில் – ஐந்து ஒப்பந்தங்கள், மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஒரு ஆவணம் ஆகும் . பங்களாதேஷ் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா மற்றும் சீன நாட்டு பிரதம மந்திரி லி கெக்கியாங் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த  ஒப்பந்தங்கள்  கையெழுத்திடப்பட்டன

இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளித்தது அமெரிக்கா

  • இலங்கைக்கு மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் 480 மில்லியன் அமெரிக்க டாலரை உதவியாக அமெரிக்கா வழங்கியுள்ளது. மேலும் இந்த 480 மில்லியன் டாலர் அமெரிக்க மக்களிடமிருந்து கிடைத்த பரிசு, கடன் அல்ல என்றும் அமெரிக்கா கூறியுள்ளது

டிஜிட்டல் நிறுவனங்களுக்கான வரி விதிக்கும் திட்டத்திற்கு ஜி 7 நிதி அமைச்சர்கள் ஒப்புதல்

  • பிரான்சில் ஜி 7 நிதி மந்திரிகள் கூட்டம் நடந்தது. அதில் பேஸ்புக் மற்றும் கூகுள்  போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை ஒப்புக் கொண்டது, இது அவர்களுக்கு குறைந்தபட்ச வரிவிதிப்பை நிர்ணயிக்கும். ஜி 7 மாநாட்டின் தலைவர் பதவியை தற்போது வகிக்கும் பிரான்ஸ், உலகின் மிகவும் வளர்ந்த நாடுகளின் குழுவான ஜி7ற்கு   ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், புதிய வணிக மாதிரிகளை நிவர்த்தி செய்ய புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

உலகின் மிகப்பெரிய தீக்காய மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவமனை

  • உலகின் மிகப்பெரிய தீக்காய மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான மருத்துவமனை வங்கதேசத்தின் டாக்காவில் செயல்படத் தொடங்கியது. ஷேக் ஹசீனா தேசிய தீக்காய மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவமனை என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை 50 படுக்கையறைகள் மற்றும் 12 ஆபரேஷன் தியேட்டர்களைக் கொண்ட 500 படுக்கைகள் கொண்டுள்ளது. தீக்காயத்தால் பாதிக்கப்படும் வங்கதேச நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனை மேம்பட்ட சிகிச்சையளிக்க உதவும்.

முதலீட்டாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வசதியாக ஃபாஸ்ட்-ட்ராக் செயல்முறையை இந்தியாவும் இத்தாலியும் அமைத்தன

  • இத்தாலிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்தியாவில் முதலீடு செய்யவும், இந்திய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இத்தாலி நிறுவனங்கள் மற்றும் இத்தாலியில் முதலீடு செய்யவும் விரைவான பாதையை அமைக்க முடிவு செய்துள்ளது. ஃபாஸ்ட்-ட்ராக் செயல்முறையின் நோக்கம் இந்தியாவில் இத்தாலிய நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தங்கள் செயல்பாடுகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கண்டுபிடித்து சரிசெய்வது ஆகும்.

அடுத்த 6 ஆண்டுகளில் 5-ஜியில் 150 பில்லியன் டாலர் செலவிட சீனா திட்டமிட்டுள்ளது

  • சீனா அடுத்த ஆறு ஆண்டுகளில் 5 ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்காக 150 பில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டுள்ளது, தானியங்கி உற்பத்தியைத் தொடங்கி அதன்மூலம் பெய்ஜிங் செயற்கை நுண்ணறிவில் (AI) உலகத்தில் சிறந்து விளங்க சீனா இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார் கிறிஸ்டின் லகார்ட்

  • சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டின் லகார்ட் ஐரோப்பிய மத்திய வங்கியான ஈசிபியின் தலைவராக நியமிக்கப்படுவதற்கான பரிந்துரையைத் தொடர்ந்து தனது ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். திருமதி லகார்டின் ஈசிபி நியமனத்திற்கு ஐரோப்பிய கவுன்சில் ஒப்புதல் அளித்தால், யூரோ மற்றும் யூரோப்பகுதியின் பணவியல் கொள்கைக்கான ஐரோப்பிய மத்திய வங்கியின் முதல் பெண் தலைவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்காளதேசத்தில் சீன திட்டங்களுக்கான நிதி வழங்கல் குறித்து விசாரிக்க கூட்டு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

  • வங்காளதேசத்தில் நடந்து வரும் சீன திட்டங்களுக்கான மிகக் குறைந்த அளவிலான நிதி வழங்கலை விசாரிக்க வங்காளதேசமும் சீனாவும் சேர்ந்து ஒரு கூட்டு செயற்குழுவை அமைத்துள்ளன. 2016 ஆம் ஆண்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் டாக்கா பயணத்தின் போது  27 திட்டங்களுக்கான  ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. ஆனால் சீனா இதுவரை வாக்குறுதியளிக்கப்பட்ட 20 பில்லியன் அமெரிக்க டாலர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே வழங்கியுள்ளது.

1968ல் காணாமல்போன பிரெஞ்சு நீர்மூழ்கிக் கப்பல் மத்தியதரைக் கடலில் கண்டுபிடிக்கப்பட்டது

  • 1968 ஆம் ஆண்டில் காணாமல் போன ஒரு நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவை கண்டுபிடித்ததாக பிரெஞ்சு கடற்படை அறிவித்தது, அது எவ்வாறு மறைந்து போனது என்ற 50 ஆண்டுகால மர்மம் இறுதியாக தீர்க்கப்படக்கூடும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மினெர்வ் என அழைக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல், கடைசியாக பிரான்சின் தெற்கு கடற்கரையிலிருந்து 52 மாலுமிகளுடன் 1968 ஜனவரி 17 அன்று தொடர்புகொண்டது.

இந்தியா-நேபாள உறவை மேலும் வலுப்படுத்தும் மோத்திகரி- அமலேக் கஞ்ச் எண்ணெய் குழாய் இணைப்பு

  • மோத்திகரி- அமலேக் கஞ்ச் எண்ணெய் குழாய் இணைப்பு எனும் மைல்கல் திட்டத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐஓசி) மற்றும் நேபாள ஆயில் கார்ப்பரேஷன் (என்ஓசி) இணைந்து நிறைவு செய்துள்ளது. இது இந்தியாவிலிருந்து வரும் முதல் நாடுகடந்த பெட்ரோலிய குழாய் மற்றும் முதல் தெற்காசிய எண்ணெய் குழாய் நடைபாதையாகும். அதுமட்டுமன்றி இது நேபாளத்தின் முதல் எண்ணெய் குழாய் பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்

  • கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் போரிஸ் ஜான்சன் பிரிட்டனின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். திரு ஜான்சன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணியைச் சந்திக்கவுள்ளார், அங்கு அவர் புதிய அரசாங்கத்தை உருவாக்க அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரு ஜான்சன் பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெற அவரது முன்னோடி தெரசா மேவைப் போலவே, வடக்கு அயர்லாந்தின் ஜனநாயக யூனியனிஸ்டுகளின் ஆதரவை நம்பியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு வருகை தரும் இங்கிலாந்து மாணவர்களுக்கு நிதியளிக்கும் புதிய இந்தியா-இங்கிலாந்து திட்டம்

  • பிரிட்டனின் பல்கலைக்கழகங்களை ஆதரிப்பதற்காக புதிய இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு பைலட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர்கள் மார்ச் 2021 க்குள் இந்தியாவுக்கு வருவதற்கான 200 வாய்ப்புகளை உருவாக்குவது இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தியா, சீனா எல்லைப் பகுதிகளில் நிலைமையை ஆய்வு செய்கின்றன

  • அமைதியையும் ஸ்திரத்தன்மையும் பேணுவதற்காக எல்லைப் பகுதிகளின் நிலைமையை இந்தியாவும் சீனாவும் ஆய்வு செய்துள்ளன. இரு தரப்பினர் இடையே பெய்ஜிங்கில் இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான WMCC இன் 14 வது கூட்டத்தை நடத்தினர்.

ஹெபாடிடிஸ் பி வைரஸை வங்கதேசம், பூட்டான், நேபாளம் மற்றும் தாய்லாந்து கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக WHO தெரிவித்துள்ளது

  •  தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தில் உள்ள பூட்டான், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகியவற்றுடன் வங்கதேசமும் ஹெபாடிடிஸ் பி வைரஸை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. ஐந்து வயது குழந்தைகளிடையே இந்த கொடிய நோயின் தாக்கம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகியுள்ளது என்று WHO தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

போரிஸ் ஜான்சனின் பிரிட்டிஷ் அமைச்சரவையில் 3 இந்திய வம்சாவளி நபர்கள்

  • புதிய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மூலம் விரைவில் இங்கிலாந்து அரசாங்கத்தில் சேர்க்கப்படவுள்ள அமைச்சர்களில் மூன்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், பிரிதி படேல் மற்றும் அலோக் சர்மா ஆகியோர் அடங்குவர். உள்துறை செயலாளராக பிரிதி படேல், கருவூல தலைமை செயலாளராக ரிஷி சுனக் மற்றும் சர்வதேச வளர்ச்சி செயலாளராக அலோக் சர்மா ஆகியோர் நியமிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைட்டியில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையினர் முன்மாதிரியான சேவைக்காக விருதுகளை வென்றனர்

  • கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஹைட்டிய காவல்துறையை ஆதரித்த இந்திய அமைதி காக்கும் படையினர், வரும் அக்டோபரில் ஐ.நா. மிஷன் நிறைவடைவதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு திரும்புகின்றனர். அவர்களின் பங்களிப்புக்காக பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றனர். இந்தியாவின் 184 ஆண்டுகள் பழமையான துணை ராணுவப் படையான அசாம் ரைபிள்ஸை சேர்ந்த 140 வீரர்கள் இதில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்பமண்டல புயல் எரிக் சூறாவளியாக வலுப்பெற்றது

  • அமெரிக்காவில், கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பமண்டல புயல் எரிக் பலமான சூறாவளியாக வலுப்பெற்றது என்று தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

ஒரு நாளில் 200 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடவு செய்தது எத்தியோப்பியா

  • ஜூலை 29 அன்று எத்தியோப்பியர்கள் 200 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நட்டனர், இது உலக சாதனையாக அமையும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். எத்தியோப்பியா மரம் நடும் திட்டத்தின் மத்தியில் உள்ளது, இதன்படி மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 4 பில்லியன் மரங்களை நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இது அந்நாட்டு பிரதமர் அபி அகமதுவின் லட்சிய முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Download PDF

சர்வதேச செய்திகள் Video in Tamil

To Follow  Channel – Click Here

Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!