EPFO அக்கவுண்ட் வைத்திருப்போருக்கு ஜாக்பாட் – விரைவில் வட்டி விகிதம் உயர்வு?
2021-22-ம் நிதியாண்டுக்கான EPFO வட்டி விகிதம் உயர்த்தப்படுவது குறித்து, EPFO அமைப்பு கவுகாத்தியில் மார்ச் 4 மற்றும் 5ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளன. மேலும் PF கணக்கில் பங்களிப்பு செய்பவர்களுக்கு புதிய மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்கள்:
2022-23 நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கான அறிவிப்புகள் இருந்தன, இருப்பினும் மாத ஊதியம் பெறுபவர் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் 2021-22-ம் நிதியாண்டுக்கான EPF வட்டி விகிதம் உயர்த்தப்படுவது குறித்து EPFO அமைப்பு கவுகாத்தியில் மார்ச் 4 மற்றும் 5 ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளன.
வாஷிங்டன் சுந்தர் முதல் தீபக் ஹூடா வரை – அதிக தொகைக்கு ஏலம் போகும் 5 இந்திய ஆல்ரவுண்டர்கள்!
அந்த வகையில் இன்று பிற்பகலுக்குப் பின் முதலீடுகள், கணக்குகள் ஆகியவை குறித்து நிதி முதலீடு மற்றும் தணிக்கைக் குழு ஆலோசனை நடத்துகிறது. மேலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் EPFO வாரியம் 2020 – 2021 ம் ஆண்டுக்கான வட்டி விகிதத்தை 8.5% ஆக நிர்ணயித்தது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 4, 5ம் தேதிகளில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் EPFO வட்டி விகிதம் உயர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2020-21ம் ஆண்டில் 3.59 கோடி கணக்கு வைத்துள்ள தொழிலாளர்களின் சேமிப்புக்கு 8.50 %வட்டி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை 56.79 செட்டில்மெண்ட் களை PF வாரியம் முடித்துள்ளது. இதுவரை PF பணத்திலிருந்து கடன் பெறும் திட்டத்தின் மூலம் ரூ.14 ஆயிரத்து 310 கோடி வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் ஓமிக்ரான் நோய்த்தொற்று பரவல் – திடீரென பொதுமுடக்கம் அமல்!
இந்த வகையில் PF கணக்கில் அதிகம் பங்களிப்பு செய்பவர்களுக்கு வரிவிதிக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் வரிவிதிப்பு உட்பட்டவை மற்றும் வரிவிதிப்பு உட்படாதவை என இரண்டு கணக்குகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஒரு ஆண்டுக்கு PF கணக்கில் ரூ 25 லட்சத்துக்கு மேல் அதிகம் பங்களிப்பு செய்பவர்களுக்கு கூடுதல் தொகைக்கு வரி செலுத்த வேண்டும், இந்த நடைமுறை ஏப்ரல் 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது.