வாஷிங்டன் சுந்தர் முதல் தீபக் ஹூடா வரை – அதிக தொகைக்கு ஏலம் போகும் 5 இந்திய ஆல்ரவுண்டர்கள்!

0
வாஷிங்டன் சுந்தர் முதல் தீபக் ஹூடா வரை - அதிக தொகைக்கு ஏலம் போகும் 5 இந்திய ஆல்ரவுண்டர்கள்!
வாஷிங்டன் சுந்தர் முதல் தீபக் ஹூடா வரை - அதிக தொகைக்கு ஏலம் போகும் 5 இந்திய ஆல்ரவுண்டர்கள்!
வாஷிங்டன் சுந்தர் முதல் தீபக் ஹூடா வரை – அதிக தொகைக்கு ஏலம் போகும் 5 இந்திய ஆல்ரவுண்டர்கள்!

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் IPL தொடருக்கான ஏலம் இம்மாதம் 12,13 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ள நிலையில் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போக வேண்டும் என்று சில வீரர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் அதிக தொகைக்கு ஏலம் போகும் 5 இந்திய ஆல்ரவுண்டர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

IPL மெகா ஏலம்:

பெங்களூருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 590 வீரர்கள் பங்கேற்கும் ஐபிஎல் 2022 ஏலத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அனைத்து அணிகளும் எந்தெந்த வீரர்களை வாங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனையைத் தொடங்கியுள்ள நிலையில், யார் யார் எந்த அணிக்கு செல்வார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இம்முறை புதிதாக 2 அணிகள் இடம்பெற்றுள்ளதால் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிக தொகைக்கு ஏலம் போகும் 5 இந்திய ஆல்ரவுண்டர்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

அடுத்த 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஹிஜாப் விவகாரம் எதிரொலி!

கடந்த ஆண்டு RCB அணியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தரை 2018 ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) ரூ. 3.2 கோடிக்கு எடுத்தது. இந்த ஆண்டு RCB அணி அவரை தக்க வைக்கவில்லை. இதனால் இம்முறை சுந்தர் அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2020 ஐபிஎல் சீசனில், அவர் வெறும் 5.96 எகானாமியில் பந்துவீசியது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்த தீபக் ஹூடாவும் அதிக தொகைக்கு ஏலம் போகும் வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? ஃபிட்மென்ட் காரணி கணக்கீடு விவரங்கள் இதோ!

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணியில் விளையாடிய சிவம் துபேவும் இப்பட்டியலில் உள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) தொடர் வெற்றியாளர்களாக மாறியதில் பாண்டியா சகோதரர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த வகையில் 2018 அம ஆண்டு 8.80 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏலம் போன க்ருனால் பாண்டியாவும் இம்முறை பல கோடிக்கு ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிக விலைக்கு ஏலம் போகும் பட்டியலில் ரிஷி தவான் இணைந்துள்ளார். 2013 இல் மும்பை அணியின் முதல் தொடர் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கொல்கத்தா அணியில் இடம் பெற்றார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here