வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – டெபாசிட் கணக்கு வைத்திருப்போருக்கு வட்டி விகிதம் உயர்வு!

0
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - டெபாசிட் கணக்கு வைத்திருப்போருக்கு வட்டி விகிதம் உயர்வு!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - டெபாசிட் கணக்கு வைத்திருப்போருக்கு வட்டி விகிதம் உயர்வு!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – டெபாசிட் கணக்கு வைத்திருப்போருக்கு வட்டி விகிதம் உயர்வு!

இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்த நிலையில் தற்போது பல்வேறு வகையான வங்கிகள் டெபாசிட் திட்டங்களின் வட்டியை உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கோடாக் மகேந்திரா வங்கியும் தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வட்டி உயர்வு

இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளுக்கும் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் உயர்த்தியுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் என்பது, வங்கிகளுக்கு நிதி பற்றாக்குறையாக உள்ள சூழலில் ரிசர்வ் வங்கியிடம் கடன் பெறும் போது அந்த தொகைக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் தான் ரெப்போ வட்டி விகிதம் என்று கூறப்படுகிறது. அத்துடன் நாட்டில் பணவீக்கம் ஏற்படும் போது இதனை சமாளிக்க ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும். மேலும் தற்போது உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனால் வங்கிகளும் தங்களின் கடன் சுமையை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தும். அதன்படி தற்போது பல்வேறு வங்கிகளில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. இது வாடிக்கையாளர்களை அதிருப்தி அடைய செய்கிறது. அதனால் வாடிக்கையாளர்களை குஷிபடுத்தும் விதமாக பல்வேறு வங்கிகள் சேமிப்பு கணக்கு மற்றும் டெபாசிட் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு வட்டியை உயர்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கோடாக் வங்கியும் பிக்சட் டெபாசிட் மற்றும் சேமிப்பு கணக்கின் வட்டியை உயர்த்துவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பில், வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள அனைத்து வாடிக்கையாளருக்கும் ரூ. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 0.5% உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜூன் 13 முதல் அமல்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதத்தை 10 முதல் 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜூன் 10 முதல் அமல்படுத்துவதாகவும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழக 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறையின் முக்கிய உத்தரவு!

FD திட்டத்திற்கான வட்டி விகிதம்:

1. 365 நாட்கள் – 5.50% வட்டி விகிதம்

2. 391 நாட்கள் – 5.65% வட்டி விகிதம்

3. 23 மாதங்கள் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான திட்டம் – 5.75% வட்டி விகிதம்

4. 3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு குறைவான திட்டம் – 5.90% வட்டி விகிதம்

5. 1 ஆண்டு கால திட்டம் – 5.25% வட்டி விகிதம்

6. 31 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை – 3% வட்டி விகிதம்

7. 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை முதிர்வு கால திட்டம் – 3.50% வட்டி விகிதம்.

8. 180 நாட்களில் இருந்து 363 நாட்கள் வரை திட்டம் – 4.75% வட்டி விகிதம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here