Axis Bank வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் மாற்றம்!
ஆக்சிஸ் வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வெவ்வேறு காலங்களுக்கான வாய்ப்பு நிதி திட்டங்களை வழங்கி வரும் நிலையில், மார்ச் மாதம் முதல் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது.
வைப்பு நிதி:
ஆக்சிஸ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் முதல் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை மாற்றி உள்ளது. சேமிப்பு கணக்கு உள்ள வாடிக்கையாளர்களுக்கு 2021 மே 1ம் தேதி முதல் பல்வேறு சேவைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ஏடிஎமில் இருந்து பணம் எடுக்கும் சேவைக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும், சேமிப்பு கணக்கின் அடிப்படை இருப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், நிலையான வைப்பு பணத்தை சேமிப்பதற்கான மிகவும் பிரபலனமான வழிகளில் ஒன்றாக உள்ளது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் பயனர்களுக்கு நல்ல வருமானத்தையும் வழங்குகின்றது. வைப்பு நிதி கணக்கில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உங்கள் பணம் வங்கியில் சேமிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 20 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அனுமதி ரத்து!
வைப்பு காலத்தின் முடிவில் நாம் முதலீடு செய்த தொகையுடன் அதற்கான கூட்டு வட்டியும் கிடைக்கும். வைப்பு நிதிக்கான கணக்கு தொடங்கும் போது ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட வட்டி விகிதங்களை நிர்ணயிக்கின்றது. ஆக்சிஸ் வங்கி 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை வெவ்வேறு காலங்களில் FD வட்டி விகிதத்தை வழங்குகிறது. 2 வருடங்களுக்கான வைப்புத்தொகைக்கு ஆக்சிஸ் வங்கி 5.50% வட்டி வழங்குகிறது. ஆக்சிஸ் வங்கியின் திருத்தப்பட்ட வட்டி விகிதம் ஆகஸ்ட் 14ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வருகிறது.
TN Job “FB
Group” Join Now
ஆக்சிஸ் வங்கி வயது முதிர்ந்த மூத்த குடிமக்களுக்கு வைப்பு நிதி காலத்தின் முடிவில் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதிக்கு 2.5% முதல் 6.50% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு 5 முதல் 10 ஆண்டு வரையிலான கால வைப்பு நிதிக்கு 5.75% வட்டி விகிதம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.