INTEL நிறுவன ஊழியர்களுக்கு வந்த ஷாக் நியூஸ் – 200 ஊழியர்கள் பணிநீக்கம்!

0
INTEL நிறுவன ஊழியர்களுக்கு வந்த ஷாக் நியூஸ் - 200

உலகளவில் பல முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்து வரும் நிலையில், இன்டெல் நிறுவனமும் வேலையை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நீக்கம்

உலகளவில் தகவல் தொழில்நுட்ப துறை வேகமாக வளர்ந்து வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு முதல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பெற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை பணிநீக்கம் செய்தனர். அந்த வரிசையில் ட்விட்டர், மைக்ரோசாப்ட், மெட்டா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளன. அந்த வரிசையில் தற்போது முன்னணி சிப் உற்பத்தியாளரான இன்டெல் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனம் இதுவரை நான்கு சுற்றுகள் மூலம் பல ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதன் படி தற்போது ஐந்தாவது சுற்றில் மீண்டும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருக்கிறது. இந்த முறை 200க்கு மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது. தற்போது வெளியான அறிவிப்பின் படி இந்த முறை 235 பணியாளர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதே போல 2024 ஆம் ஆண்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!