இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 110+ காலியிடங்கள் – ரூ.1,10,000/- மாத ஊதியம்!

0
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 110+ காலியிடங்கள் - ரூ.1,10,000/- மாத ஊதியம்!

   Junior Assistant, Senior Assistant ஆகிய பணிகளுக்கு என இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் (AAI) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 27.12.2023 அன்று முதல் இணையவழி மூலம் பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI)
பணியின் பெயர் Junior Assistant, Senior Assistant
பணியிடங்கள் 119
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.01.2024
விண்ணப்பிக்கும் முறை Online

AAI காலிப்பணியிடங்கள்:  

AAI நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Junior Assistant – 75 பணியிடங்கள்

Senior Assistant – 44 பணியிடங்கள்

Jr. / Sr. Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

Junior Assistant (Fire Service) – 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு

Junior Assistant (Office) – Graduate Degree

Senior Assistant (Electronics) – Diploma (Electronics / Telecommunications / Radio Engineering)

Senior Assistant (Accounts) – Graduate Degree, B.Com

Jr. / Sr. Assistant வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 20.12.2023 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Jr. / Sr. Assistant சம்பளம்:

இந்த AAI நிறுவன பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.31,000/- முதல் ரூ.1,10,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

AAI தேர்வு முறை:

Written Test

Physical Measurement Test

Computer Literacy Test

AAI விண்ணப்ப கட்டணம்:

SC / ST / Women / PWBD / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.1000/-

AAI விண்ணப்பிக்கும் முறை:

இந்த AAI நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 27.12.2023 அன்று முதல் 26.01.2024 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!