தமிழக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு கட்டணம் உயர்வு – இன்று முதல் அமல்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு கட்டணம் உயர்வு - இன்று முதல் அமல்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு கட்டணம் உயர்வு - இன்று முதல் அமல்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு கட்டணம் உயர்வு – இன்று முதல் அமல்!

தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு கட்டணம் இன்று முதல் (01.07.2021) ரூ.300 ஆக உயர்ந்துள்ளது என அரசு அறிவித்து உள்ளது.

மருத்துவ காப்பீடு கட்டணம்:

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது. இந்த காப்பீடு திட்டத்தில் இணைந்தவர்களுக்கு அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் மருத்துவ சிகிச்சைகள் காப்பீடு திட்டம் மூலம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் 109 புதிய பணியிடங்கள் – அரசாணை வெளியீடு!

தற்போது தமிழக அரசு சார்பில், அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் படி மருத்துவ காப்பீடு கட்டணம் ரூ.300 ஆக உயர்ந்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் படி காப்பீடு கட்டணத்தொகை ரூபாய் 180 இல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று (ஜூலை 1) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் நான்கு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1,169 மருத்துவமனைகள் உள்ளது. இந்த மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!