Instagram பயனாளர்கள் கவனத்திற்கு – இதுவரை இல்லாத அட்டகாசமான அம்சம் அறிமுகம்!

0
Instagram பயனாளர்கள் கவனத்திற்கு - இதுவரை இல்லாத அட்டகாசமான அம்சம் அறிமுகம்!
Instagram பயனாளர்கள் கவனத்திற்கு - இதுவரை இல்லாத அட்டகாசமான அம்சம் அறிமுகம்!
Instagram பயனாளர்கள் கவனத்திற்கு – இதுவரை இல்லாத அட்டகாசமான அம்சம் அறிமுகம்!

சமூக வலைதளங்களில் ஒன்றாக இருக்கும் இன்ஸ்டாகிராமில் தங்களின் புகைப்படம்,ரீல்ஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்ட அனைத்தையும் பயனாளர்கள் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இப்போது “Quiet Mode” என்ற அட்டகாசமான அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய அம்சம்:

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலிக்கு அடுத்தபடியாக Instagram-ஐ கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக நீங்கள் வீட்டில் இருந்தவாறு தங்களின் திறமைகளை வெளிக்கொணர முடியும். மேலும் இதன் Story-ல் உங்களின் புகைப்படம், பாடல் வீடியோவை எடிட் செய்து பதிவிடுவது, ரீல்ஸ் உள்ளிட்டவைகளை மேற்க்கொள்ளலாம். இவ்வாறு Reels, Story-க்கு புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் ஆனது பயனாளர்களை கவரும் வகையில் தினமும் புதுப்புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

விமான நிலையத்தில் பணிபுரிய இலவச பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு.. இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பு!

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் தற்போது, “Quiet Mode” என்ற அட்டகாசமான அம்சத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக உள்வரும் அறிவிப்புகளை அமைதிப்படுத்துதல், தங்களின் Direct Message-களுக்கு தானாகப் பதிலளிப்பது மற்றும் மேலும் நீங்கள் தற்போது Online-ல் இல்லை என்பதை தெரியப்படுத்துவது உள்ளிட்டவைகளை செயல்படுத்தும்.

இதன் மூலமாக மாணவர்கள் படிக்கும் நேரத்தையும், தூங்கும் நேரத்தையும் மற்றும் Instagram பயன்படுத்தும் நேரத்தையும் கட்டுப்படுத்த முடியும். Instagram செயலில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவளித்துள்ளீர்கள் என்பதையும் கண்டறிய முடியும். அத்துடன் “take a break” என்பதில் நீங்கள் குறிப்பிட்ட நேரத்தையும் உள்ளிட்டு இதன் மூலமாக நீங்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவதை தவிர்க்க முடியும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!