விமான நிலையத்தில் பணிபுரிய இலவச பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு.. இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பு!

0
விமான நிலையத்தில் பணிபுரிய இலவச பயிற்சி - விண்ணப்பங்கள் வரவேற்பு.. இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பு!
விமான நிலையத்தில் பணிபுரிய இலவச பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு.. இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பு!

தமிழக இளைஞர்கள் விமான நிலையத்தில் பணியாற்ற இலவச பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். இதில் பயிற்சி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இலவச பயிற்சி:

தமிழகத்தில் தாட்கோ நிறுவனம் சார்பில் SC/ ST இளைஞர்களுக்கு விமான நிலையத்தில் பணியாற்ற இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது. சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ். அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பில் விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்ற பி.டி.சி. ஏவிஷேன் அகாடெமி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

வருமான வரி விலக்கு பெற வேண்டுமா? இதற்கான சிறந்த வழிகள் இதோ!

Follow our Instagram for more Latest Updates

இந்த பயிற்சியை பெற விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பட்ட படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் வயது வரம்பு 25க்கும் குறைவாக இருக்க வேண்டும். மேலும் SC/ST பிரிவை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இத்தகைய தகுதியுடையவர்கள் www.tahdco.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த 3 மாத கால பயிற்சியில் இணைபவர்களுக்கு தங்கும் விடுதி வசதியை தாட்கோ நிறுவனம் வழங்கும்.

அது மட்டுமல்ல பயிற்சிக்கான செலவுத்தொகையை ரூ.20,000 அந்நிறுவனவே ஏற்கும். மேலும் பயிற்சி காலம் முடிந்தவுடன் முன்னணி தனியார் விமான நிலையங்களில் 100% வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!