இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் Double Tucker பஸ் – முழு விவரம் இதோ!

0
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் Double Tucker பஸ் - முழு விவரம் இதோ!
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் Double Tucker பஸ் - முழு விவரம் இதோ!
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் Double Tucker பஸ் – முழு விவரம் இதோ!

எரிபொருள் விலை ஏற்றத்தால் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பலர் தங்களின் அடுத்த தேர்வாக எலக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற டபுள் டக்கர் பேருந்துகளில் தற்போது எலக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் காணலாம்.

எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ்:

உலக அளவிலான பணவீக்கப் பிரச்சனை அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சந்தை கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு, நாள் உயர்ந்து வருகிறது. இதனால் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது பல மாநிலங்களில் மாநில போக்குவரத்து தேவைக்காக எலக்ட்ரிக் பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அதில் தற்போது மும்பை மாநகரில் மிகவும் புகழ் பெற்ற டபுள் டக்கர் பேருந்துகளில் தற்போது எலக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதனை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

இந்த வகை பேருந்துகள் மும்பையில் மிகவும் பிரபலமான பேருந்துகள் ஆகும். இந்த பேருந்துகளை Switch Mobility நிறுவனம் உருவாகியுள்ளது. இந்த பேருந்துகளில் மொத்தமாக 900 எலக்ட்ரிக் டபுள் டக்கர் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பேருந்து பெயர் Metrodecker என்று அழைக்கப்படுகிறது. Switch Mobility நிறுவனம் இதுகுறித்து, குறைந்த எடையில் அதிக ரேஞ்சு கொண்ட பேருந்தாக, இந்த பேருந்து உள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த பேருந்துகள் ஏற்கனவே லண்டன் போன்ற நகரங்களில் பயன்பாட்டில் உள்ளன.

தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

Exams Daily Mobile App Download

இந்த எலக்ட்ரிக் பேருந்துகள் அனைத்தும் 10.5 மீட்டர் முதல் 11.1 மீட்டர் நீளம் வரை உள்ளது. இந்த பேருந்துகளில் 99 பயணிகள் அமரலாம். இந்த பேருந்துகளில் 250KW எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ஒரு சிங்கள் சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் தூரம் ரேஞ்சு கொண்டிருக்கும். மேலும் மும்பையில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் பேருந்து 90 பயணிகள் அமர்ந்து செல்லும் வசதி கொண்டிருக்கும். இதில் நகர் பகுதிகளுக்கு மட்டும் 450 எலக்ட்ரிக் பேருந்துகள் அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. இந்த முதல் எலக்ட்ரிக் பேருந்து தற்போது டெஸ்டிங் செய்யப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்.

இந்த முதல் எலக்ட்ரிக் பேருந்து Brihanmumbai Electric Supply and Transport (BEST) நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது BEST நிறுவனம் 400 சிங்கள் டெக்கர் எலக்ட்ரிக் பேருந்துகள், 48 நான் AC டபுள் டக்கர் பேருந்துகள் உள்ளன. வரும் 2028 ஆம் ஆண்டிற்குள் BEST நிறுவனத்தின் அனைத்து பேருந்துகளையும் எலக்ட்ரிக் பேருந்துகளாக மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த மின்சார டபுள் டக்கர் பேருந்து சென்னை எண்ணூரில் தயாராகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!