ஆப்கனில் உள்ள இந்தியர்கள் ஆன்லைன் மூலம் விசா பெறலாம் – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

0
ஆப்கனில் உள்ள இந்தியர்கள் ஆன்லைன் மூலம் விசா பெறலாம் - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
ஆப்கனில் உள்ள இந்தியர்கள் ஆன்லைன் மூலம் விசா பெறலாம் - உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
ஆப்கனில் உள்ள இந்தியர்கள் ஆன்லைன் மூலம் விசா பெறலாம் – உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைன் மூலம் விசா பெறலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் e-Emergency x-misc visa என்ற நடைமுறை மூலம் விசா பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆன்லைன் மூலம் விசா:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்ததால் அப்பகுதி முழுவதும் போர்க்களமாக மாறி பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கொரோனா தொற்று பரவி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் ஆப்கானிஸ்தானின் நிகழ்வுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை விதைக்கிறது. ஆப்கானிஸ்தானில் வாழும் வெளி நாட்டு மக்கள் இத்தகைய சூழலில் தங்களின் தாயகம் செல்ல முடிவெடுத்து வருகின்றனர். மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஆசிரியர் பயிற்சிக்கு ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

காபூல் விமான நிலையத்தில் பயணிகள் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய குடிமக்களை இந்தியா அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஆன்லைன் மூலம் விசா பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக e-Emergency x-misc visa என்ற நடைமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

முதற்கட்டமாக 129 பயணிகள் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா திரும்பியுள்ளனர். மேலும் ஒரு விமானம் மூலம் அங்கு பணியாற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என மொத்தம் 120 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆப்கனில் உள்ள இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால், +9197177 85379 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உதவிகளை பெறலாம் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!